AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: அடிக்கடி கைகளில் கூச்ச உணர்வு ஏன்..? மரத்துப்போன உணர்வும் ஏற்படுகிறதா?

Tingling In Hands Causes: தோள்பட்டைக்கும் கழுத்திற்கும் இடையில் உள்ள நரம்புகள் அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தமும் கைகளில் கூச்ச உணர்வை ஏற்படுத்தலாம், குறிப்பாக கையை நீண்ட நேரம் உயர்த்தி வைத்திருக்கும்போது அல்லது கனமான பொருட்களைத் தூக்கும்போது இது நிகழலாம். கூச்ச உணர்வுடன் பலவீனம், பொருட்களைக் கீழே போடுதல் அல்லது வலி அதிகரித்தல் போன்றவையும் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

Health Tips: அடிக்கடி கைகளில் கூச்ச உணர்வு ஏன்..? மரத்துப்போன உணர்வும் ஏற்படுகிறதா?
கை கூச்சம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Apr 2026 14:31 PM IST

உங்கள் கைகளில் அடிக்கடி கூச்சம் (Tingle) அல்லது மரத்துப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதா? பலர் இதை சாதாரண விஷயம் என கருதி புறக்கணிக்க தொடங்குகிறார்கள். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட நோய்க்கான அறிகுறியை உடலுக்கு தருகிறது என்பதை புரிந்துகொள்வது முக்கியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் சில சமயங்களில் தவறான நிலையில் உறங்கும்போது அல்லது நமது கைகளை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்திருக்கும்போது இந்தப் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது. நரம்புகளின் (Nerve) மீதான இந்த அழுத்தம் அல்லது இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தற்காலிகக் குறைபாடு கூச்சத்தை ஏற்படுத்துகிறது.

ALSO READ: நடைப்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவது எப்படி?

இந்தப் பிரச்சனை எப்போது ஏற்படுகிறது?

உங்கள் கைகளில் கூச்சம் அல்லது மரத்துப்போதல் அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது நீண்ட காலம் நீடித்தாலோ, அதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கலாம். theheartysoul-இன் படி, மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று கார்பல் டன்னல் சிண்ட்ரோம் ஆகும். இதில், மணிக்கட்டில் உள்ள ஒரு நரம்பு அழுத்தப்படுவதால், கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களில் கூச்ச உணர்வு அல்லது வலி ஏற்படுகிறது. சில சமயங்களில், இந்தப் பிரச்சனை மணிக்கட்டில் இல்லாமல், முழங்கை அல்லது கழுத்து வரை தொடரலாம். நரம்புகளில் எங்கு அழுத்தம் ஏற்பட்டாலும், அது கையைப் பாதித்து, கூச்ச உணர்வையும் பலவீனத்தையும் ஏற்படுத்தும்.

இது ஏற்படுவதற்கான காரணம் என்ன..?

இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். குளிர் அல்லது திடீர் வெப்பநிலை மாற்றங்களுக்கு உள்ளாகும் போது விரல்களில் உணர்வின்மை மற்றும் நிறமாற்றம் ஏற்படலாம். இவற்றை எக்காரணத்தை கொண்டும் அலட்சியம் செய்யக்கூடாது. மேலும், சர்க்கரை நோய் போன்ற நோய்களும் நரம்புகளைப் பாதிக்கலாம். நரம்புகள் பலவீனமடையும் போது, ​​கைகளிலும் கால்களிலும் கூச்ச உணர்வு, எரிச்சல் அல்லது உணர்வின்மை ஏற்படலாம்.

வைட்டமின் பி12 குறைபாடு:

வைட்டமின் பி12 குறைபாடும் ஒரு முக்கியக் காரணமாகும். இது படிப்படியாக நரம்புகளைச் சேதப்படுத்தும். மக்கள் பெரும்பாலும் சோர்வு அல்லது பலவீனத்தைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால், இது உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில சமயங்களில், தைராய்டு பிரச்சனைகளும் கைகளில் கூச்ச உணர்வை ஏற்படுத்தலாம். சீர்குலைந்த வளர்சிதை மாற்றம் நரம்புகளைப் பாதித்து, இந்தப் பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும்.

ALSO READ: நலமுடன் வாழ நச்சுனு 10 டிப்ஸ்: மருத்துவர்கள் கூறும் ஆரோக்கிய வழிகாட்டி!

மேலும் சில காரணங்கள்..

தோள்பட்டைக்கும் கழுத்திற்கும் இடையில் உள்ள நரம்புகள் அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தமும் கைகளில் கூச்ச உணர்வை ஏற்படுத்தலாம், குறிப்பாக கையை நீண்ட நேரம் உயர்த்தி வைத்திருக்கும்போது அல்லது கனமான பொருட்களைத் தூக்கும்போது இது நிகழலாம். கூச்ச உணர்வுடன் பலவீனம், பொருட்களைக் கீழே போடுதல் அல்லது வலி அதிகரித்தல் போன்றவையும் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இது நரம்புகளில் தொடர்ச்சியான அழுத்தம் இருப்பதற்கான அல்லது ஒரு தீவிரமான பிரச்சனை உருவாகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். கையின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் மரத்துப்போதல், பேசுவதில் சிரமம் அல்லது தலைச்சுற்றல் ஆகியவையும் பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொள்வது அவசியம்.

Follow Us