Health Tips: மழைக்காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது ஆரோக்கியமானதா..? இதை கவனிப்பது முக்கியம்!
Non-Veg in Monsoon: மழைக்காலத்தில் அசைவ உணவு உட்கொள்ளுவதால் செரிமானப் பிரச்னைகள், தொற்றுநோய் அபாயம், மற்றும் வறுத்த உணவுகளின் தீமைகள் ஆகியவற்றை விளக்கியுள்ளது. புதியதாகவும் சுத்தமாகவும் இருக்கும் அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, வீட்டில் சமைப்பது மற்றும் வெளி உணவு உண்ணும்போது தூய்மையை உறுதி செய்வது போன்ற பாதுகாப்பு குறிப்புகளையும் வலியுறுத்துகிறது.

மழைக்காலங்களில் (Rainy Season) பெரும்பாலும் லேசான உணவுகளை எடுத்துகொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் பலர் அசைவ உணவுகளை விரும்பி பருவ நிலை மாற்றத்தை கண்டுகொள்ளாமல் எடுத்துகொள்கிறார்கள். அசைவ உணவு (Non-Vegetarian Food) பொதுவாகவே புரதத்தின் நல்ல மூலமாகும், இதனால் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், மழைக்காலங்களில் இந்த உணவை உண்பது சில நேரங்களில் தீங்கு விளைவிக்கும். மழை நாட்களில் அதிக அளவில் அசைவ உணவுகளை உட்கொள்ளும்போது, அது அஜீரணம் அல்லது வயிறு தொடர்பான (Food Poisoning) பிற நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அசைவம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள்:
அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவது கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மழைக்காலங்களில், நமது செரிமான அமைப்பு மிகவும் மெதுவாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அசைவ உணவுகளை சாப்பிடுவது அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் அசைவ உணவுகள் ஜீரணிக்க நிறைய நேரம் எடுக்கும்.
ALSO READ: சமையலறையில் அதிக நேரம் செலவிடும் பெண்களுக்கு அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய்..!




தொற்று ஏற்படும் அபாயம்:
மழைக்காலத்தில் மோசமான தண்ணீர் காரணமாக அசைவ உணவுகள் விரைவாக கெட்டுவிடும். சில நேரங்களில் பழைய கறி என்பது தெரியாமல் நாம் கடைகளில் வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். சில நேரஙக்ளில் இது சரியாக சமைக்கப்படாவிட்டால், அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும்.
வறுத்த கறிகளை தவிர்ப்பது நல்லது:
பெரும்பாலானோர் மழைக்காலத்தில் சிக்கன் 65 போன்ற வறுத்த கறிகளை சாப்பிட அதிக ஆசை கொள்கிறார்கள். இதன்காரணமாக, சாலையோர கடைகளில் ஆரோக்கியமற்ற முறையில் பொறிக்கப்படும் சிக்கன் உள்ளிட்ட மற்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இது இரவு நேரங்களில் சாப்பிடும்போது, சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்று வலி போன்றவற்றை ஏற்படலாம். முடிந்தவரை, வீட்டிலேயே செய்து சாப்பிட பழகுங்கள். அப்படி இல்லையென்றால், வேகவைத்த அசைவ உணவுகளை எடுத்து கொள்ளுஙக்ள்.
மீனில் பெரும்பாலும் முட்டைகளும் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சில நேரங்களில் மீன்கள் அழுக்கு நீரில் வைக்கப்படுகின்றன. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சிக்கனை பொறுத்தவரை, பறவைக் காய்ச்சல் அபாயமும் இந்த நாட்களில் அதிகரிக்கிறது. எனவே, மழைக்காலங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை சாப்பிடக்கூடாது.
ALSO READ: காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகளா..? சர்க்கரை நோயாக இருக்கலாம்..!
சில முக்கியமான விஷயங்கள்:
- அசைவம் புதியதாக இருக்க வேண்டும், நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
- நீங்கள் வெளியில் இருந்து அசைவ உணவை ஆர்டர் செய்தால் அல்லது சாப்பிட்டால், அதன் தூய்மையை முழுமையாகச் சரிபார்க்கவும்.