AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலச்சிக்கலால் குழந்தை அழுகிறதா? நொடியில் தீர்க்கும் வைத்தியம்!

Child Constipation: பொதுவாக மரபு வழி காரணங்கள், நார்ச்சத்து குறைவான உணவு மற்றும் அதிகப்படியான பசும்பால் நுகர்வு போன்றவற்றால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு அரை லிட்டர் பாலுக்கு மேல் கொடுப்பதைத் தவிர்ப்பதன் மூலம் மலக்கட்டு ஏற்படுவதை முதன்மையாகத் தடுக்கலாம்.

மலச்சிக்கலால் குழந்தை அழுகிறதா? நொடியில் தீர்க்கும் வைத்தியம்!
குழந்தைகளின் மலச்சிக்கல்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 Jul 2026 22:45 PM IST

இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கும் ஒரு முக்கிய ஆரோக்கியப் பிரச்சினையாக குழந்தைகளின் மலச்சிக்கல் உருவெடுத்துள்ளது. மலம் கழிக்கும் போது குழந்தைகள் படும் அவஸ்தையையும், அவர்கள் அழுவதையும் பார்க்கும் போது பெற்றோர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். பொதுவாக, இந்த மலச்சிக்கல் பிரச்சினைக்கு மரபு ரீதியான காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. எனினும், முறையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்குவதன் மூலம் இந்த அவதிக்கு நம்மால் மிக எளிதாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அளவுக்கு மிஞ்சிய பசும்பால்: மலச்சிக்கலின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணி

குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியப் பங்கு வகித்தாலும், அதுவே அளவுக்கு அதிகமாகும் போது உபாதையாக மாறிவிடுகிறது. தற்போதைய நவீன உணவு முறையில் நார்ச்சத்தற்ற உணவுகளைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பதும், அளவுக்கு அதிகமாகப் பசும்பால் புகட்டுவதும் மலச்சிக்கலைத் தீவிரப்படுத்துகிறது. பொதுவாக, ஒரு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் மட்டுமே போதுமானது என்று மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பல வீடுகளில் இந்த அளவைத் தாண்டி தொடர்ந்து குழந்தைகளுக்குப் பால் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிகப்படியான பால் நுகர்வு, குழந்தைகளின் செரிமான மண்டலத்தைப் பாதித்து மலச்சிக்கலை உருவாக்குகிறது. எனவே, உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது சிரமப்பட்டு அழுதால், முதலில் அவர்கள் தினமும் குடிக்கும் பாலின் அளவைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

தண்ணீர் பற்றாக்குறை: உடலின் நீர்ச்சத்தும் மலம் கழிப்பதில் ஏற்படும் சிக்கல்களும்

குழந்தைகளின் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாததும் இந்த மலச்சக்கலுக்கு மற்றொரு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. விளையாட்டிலும் பிற செயல்பாடுகளிலும் மூழ்கிவிடும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்கத் தவறிவிடுகிறார்கள். இதனால் மலம் இறுகிப்போய், வெளியேறுவதில் கடுமையான சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க, குழந்தைகளுக்குத் தொடர்ந்து சீரான இடைவெளியில் போதிய அளவு தண்ணீர் கொடுப்பதை பெற்றோர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

Also Read: மழை காலத்தில் அழகு பாப்பாவின் ஆடைகளை அசத்தலாகப் பராமரிக்க அருமையான வழி

மாற்று வழிகள்: தண்ணீர் குடிக்காத குழந்தைகளுக்குச் சுவையான இயற்கை தீர்வுகள்

சில குழந்தைகள் வெறும் தண்ணீரைக் குடிக்க அடம் பிடிப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்குத் தண்ணீரின் சுவையைச் சற்றே மாற்றி, ஆரோக்கியமான முறையில் கொடுக்கலாம். தண்ணீரை அப்படியே கொடுப்பதற்குப் பதிலாக, சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த சீரகத் தண்ணீர் அல்லது ஓமம் கலந்து தயாரித்த ஓமத் தண்ணீர் போன்றவற்றை மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். இவை தண்ணீரின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் செரிமான சக்தியைத் தூண்டி, குடல் இயக்கத்தைச் சீராக்க பெரிதும் உதவுகின்றன.

Follow Us