பழைய குக்கர் பயன்படுத்துகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
Hidden Kitchen Danger : பழைய குக்கர் மற்றும் பழைய சமையல் பாத்திரங்களில் சமைப்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குக்கரை நீண்ட காலத்துக்கு பயன்படுத்தும்போது அதில் உள்ள ஈயம் உடலுக்குள் நுழைத்து ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மாதிரி புகைப்படம்
சமையலுக்கு ஒவ்வொரு வீட்டிலும் குக்கர்கள் (Cooker) பயன்படுத்தப்படுகின்றன. அரிசி முதல் பருப்பு மற்றும் சாம்பார் வரை நம் சமையலை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. ஆனால் சில நேரங்களில், குக்கரைப் பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பழைய பிரஷர் குக்கர்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த 50 வயது நபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஒரே அலுமினிய குக்கரில் சமைத்து வருவதாக தெரியவந்துள்ளது. அதில் உள்ள ஈயம் அவரது உடலில் நுழைந்து உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரஷர் குக்கரில் உள்ள ஈயம் விஷமாக மாறுமா?
ஈயம் என்பது அலுமினிய சமையல் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலப்போக்கில், இந்த பூச்சு தேய்ந்து போகத் தொடங்குகிறது. அதிக வெப்பநிலையில் உணவு சமைக்கப்படும்போதும் குக்கரில் இருந்து ஈயம் வெளிப்படலாம். எனவே, சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பு தேய்ந்து போகும்போது, இவற்றில் உள்ள ஈயம் சமையல் பாத்திரங்களுக்குள் நுழைகிறது. குக்கர் மட்டும் இல்லாமல் பல சமையல் பாத்திரங்களில் ஈயம் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க : தூங்குவதற்கு முன் ஒரு கப் இலவங்கப்பட்டை தண்ணீர்.. செரிமானத்தை சிறப்பாக்கும்..!
ஈயம் எவ்வாறு உடலுக்குள் நுழைகிறது?
குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் நீண்ட நேரம் சமைக்கப்படும்போதோ அல்லது பழையதாக இருந்தாலோ, அதன் பூச்சு தேய்ந்து போகத் தொடங்குகிறது. தக்காளி, புளி போன்ற அமில உணவுகள் ஒவ்வொரு நாளும் பழைய பாத்திரங்களில் சமைக்கப்பட்டால், ஈயம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் உணவில் கலக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது உணவு மூலம் உடலில் நுழைகிறது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள்
பழைய பாத்திரங்களில், குறிப்பாக அலுமினிய பாத்திரங்களில் நீண்ட நேரம் சமைப்பது, ஈயத்தை விஷமாக மாற்றுகிறது. உடலில் நுழையும் இந்த ஈயம் மெதுவாகக் குவிகிறது. உடலில் ஈயத்தின் அளவு ஆபத்தான அளவை அடையும் போது, அது விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த விஷம் படிப்படியாக மூளை, நரம்புகள், சிறுநீரகங்கள், இனப்பெருக்க அமைப்பு மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கிறது. ஆரம்பத்தில், அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது. உதாரணமாக, சோர்வு, எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் குழந்தைகளில் இன்னும் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் அவை மெதுவாக கடுமையான நோய்களாக உருவாகின்றன.
இதையும் படிக்க : வெள்ளை உணவுகள் உங்களுக்கு விருப்ப உணவுகளா..? இது உடலில் என்ன செய்யும் தெரியுமா..?
உடலில் ஈயம் நுழைவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் பழைய அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்கவும்.
- தக்காளி, புளி, தயிர் போன்ற புளிப்பு பொருட்கள் கொண்ட உணவுகளை பழைய பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்கவும்.
- பாத்திரங்களில் உள்ள பூச்சு உரியத் தொடங்கினால், பாத்திரங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
- சோர்வு அல்லது நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டால் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள மறக்காதீர்கள்.
- அலுமினிய குக்கர்கள் மற்றும் பாத்திரங்களுக்கு பதிலாக, துருப்பிடிக்காத எஃகு, பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.