Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalaivan Thalaivii : விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி – ‘பொட்டல முட்டையே’ பாடல் வெளியானது!

Thalaivan Thalaivii Movie Pottala Muttaye Song : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இப்படத்திலிருந்து பொட்டல முட்டையே என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Thalaivan Thalaivii : விஜய்  சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி – ‘பொட்டல முட்டையே’ பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவிImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 09 Jun 2025 21:20 PM

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவையும் கடந்து இவர் தெலுங்கிலும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து தமிழிலும் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது . அதில் ஒரு படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) . இந்த படத்தைப் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே எதர்க்கும் துணிந்தவன் , கடைக்குட்டி சிங்கம் போன்ற கிராமத்துப் படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. இப்படத்தில் லீட் கதாநாயகியாக நித்யா மேனன் (Nithya Menon) இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டின் தொடக்கத்திலே வெளியானது, தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் நடந்துவந்த நிலையில், இதுவும் கடந்த 2025, பிப்ரவரி தொடக்கத்தில் நிறைவானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக, இந்த படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இப்படத்திலிருந்து “பொட்டல முட்டையே” என்ற லிரீக்கள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட பதிவு :

 

விஜய் சேதுபதியின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இருந்துதான் இப்படத்தின் முதல் பாடலான பொட்டல முட்டையே என்ற லிரீக்கள் பாடல் வெளியாகியிருக்கிறது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து, புஷ்பா 2வில் கிஸ்ஸிக் பாடலை பாடிய பாடகி சுப்புலட்சுமியும் இணைந்து பாடியிருக்கிறார். தற்போது வெளியான இப்பாடலானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி :

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது தலைவன் தலைவி. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து நடிகை நித்யா மேனனின் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் கணவன் மனைவியாக நடித்திருக்கின்றனர். இப்படத்தின் கதைக்களமானது ஹோட்டல், காதல் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது.

இதில் நடிகர்கள் யோகி பாபு, செம்பேன் வினோத் ஜோஸ், ஆர்,கே. சுரேஷ், தீபா சங்கர், சரவணன், மற்றும் கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்ணி ஹரிபிரியன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படம் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் விடுதலை தேதி இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?
வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?...
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?...
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?...
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!...
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?...
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ...
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி...
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...