AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடும் நாயகி – ஓடிடியில் காணக் கிடைக்கிடைக்கும் சரஸ்வதி படம் எப்படி இருக்கு?

Saraswathi Movie OTT Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் எழுதி இயக்கி நாயகியாக நடித்தப் படம் எஸ் சரஸ்வதி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடும் நாயகி – ஓடிடியில் காணக் கிடைக்கிடைக்கும் சரஸ்வதி படம் எப்படி இருக்கு?
சரஸ்வதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 May 2026 22:25 PM IST

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது தமிழ் சினிமாவை விட அதிக அளவில் தெலுங்கு சினிமா படங்களில் தான் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் இயக்குநர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்தார். மேலும் இந்தப் படத்தில் அவரே கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு எஸ் சரஸ்வதி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தென்னிந்திய மொழிகளில் வெளியான இந்தப் அப்டம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ஜீவா, கிஷோர், ராவ் ரமேஷ், முரளி சர்மா, ராதிகா சரத்குமார், நாசர், துளசி, சப்தகிரி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மைம் கோபி, ஹரீஷ் பெராடி, ரகு பாபு, கெட்அப் ஸ்ரீனு, வெங்கட், குழந்தை நிவேக்ஷா, பிரமிளா ராணி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

எஸ் சரஸ்வதி படத்தின் கதை என்ன?

படத்தின் தொடக்கத்திலேயே அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சிங்கிள் மதராக 7-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் வாழ்ந்து வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் தனது மகளின் பிறந்த நாள் அன்று பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார். வேலை முடிந்து வரும் போது பள்ளியில் குழந்தையை காணவில்லை என்று தேடுகிறார். இரவு முழுவதும் தேடிவிட்டு வீடு செல்லும் வரலட்சுமிக்கு நடு ராத்திரியில் ஒரு போன் வருகிறது. அதில் பள்ளியில் உள்ள பிரின்சிபலின் அறைக்கு பின்னால் உள்ள அறையில் உள்ளதாகவும் பிரின்ஸ்பால் உடன் இணைந்து இரண்டு நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை படுத்தியதகா கூற பள்ளிக்கு சென்று மகளை பார்க்கிறார்.

Also Read… யூத் பட வெற்றி.. சிவகார்த்திகேயனுடன் கொண்டாடிய கென் கருணாஸ் – வைரலாகும் வீடியோ!

குழந்தை இறந்துவிட அந்த குழந்தையை புதைத்துவிட்டு காவல்துறையில் புகார் அளிக்கிறார். ஆனால் காவல்துறையினர் வந்து பார்த்த போது புதைத்த குழந்தையின் உடல் கிடைக்கவில்லை. இறுதியில் என்ன நடந்தது தனது மகளுக்கு நடந்த குற்றத்திற்காக அவர் பழி வாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ரிலீஸ் தேதியை லாக் செய்தது சட்டென்று மாறுது வானிலை படம்

Follow Us