Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thug Life : திரிஷாவின் நடனத்தில்.. ‘சுகர் பேபி’ வீடியோ பாடலை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!

Sugar Baby Video Song : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் திரிஷா கிருஷ்ணன் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்திலுள்ள சுகர் பேபி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thug Life : திரிஷாவின் நடனத்தில்.. ‘சுகர் பேபி’ வீடியோ பாடலை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!
சுகர் பேபி வீடியோ பாடல்
barath-murugan
Barath Murugan | Published: 26 Jun 2025 21:27 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு கமல்ஹாசனின் (Kamal Haasan)  234வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan)  நடித்திருந்தார். இந்த படத்தின் கதையைக் கமல் எழுதியிருந்த நிலூயில், கோலிவுட் ஹிட் இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இப்படத்தை இயக்கியிருந்தார். அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களம் கொண்ட இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது என்றே கூறலாம். இந்த படத்தை மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman)  இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது என்றே கூறலாம். இந்நிலையில், திரிஷாவின் (Trisha) நடனத்துடன் இப்படத்திலிருந்து சுகர் பேபி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இப்பாடல் இணையத்தில் வருகிறது.

தக் லைஃப் பட சுகர் பேபி பாடல் :

 

திரிஷாவின் மாறுபட்ட கதாபாத்திரம் :

நடிகை திரிஷா இந்த தக் லைஃப் படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் நடிகை அபிராமியும் நடித்திருந்த நிலையில், திரிஷாவின் கதாபாத்திரம்தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இதில் நடிகை திரிஷா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அதன் பிறகு அம்பு படத்தை தொடர்ந்து, இப்படத்திலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு அபிராமி மற்றும் திரிஷா கிருஷ்ணன் என இரு நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் திரிஷாவின் நடிப்பு அந்த அளவிற்கு பெரிதாகக் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

தக் லைஃப் தோல்விக்குக் காரணம் இதுவா :

நடிகர் கமல் ஹாசனின் இந்த தக் லைஃப் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். மேலும் சிலம்பரசனும் இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்த நிலையில், நிச்சயம் பிரம்மாண்ட கதியாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம். இதுவும் இப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறலாம். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைக்காதிருந்தால் இப்படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கும்.

மேலும் இப்படமானது கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை, இதனால் இப்படக்குழுவிற்கு ரூ.33 கோடி நஷ்டம் எனப் படக்குழுவே தெரிவித்திருந்தது. மேலும் கமல்ஹாசன் சர்ச்சை என இப்படத்திற்கு ரிலீசிற்கும் முன்னே நெகட்டிவ் தகவல்கள் பரவ தொடங்கியது காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.