பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்யும் சிங்கப்பூர் காவல் துறை – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கூலி படத்தின் பாடலுக்கு சிங்கப்பூர் காவல் துறை வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்யும் சிங்கப்பூர் காவல் துறை - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

பவர் ஹவுஸ்

Published: 

08 Aug 2025 21:30 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு (Superstar Rajinikanth) தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் இல்லை. உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி ரஜினிகாந்தின் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் பல்வேறு நாட்டில் இருந்து ரசிகர்கள் தமிழகத்திற்கு வந்து அவரது படத்தை திரையரங்குகளில் பார்த்துச் செல்வார்கள். இந்த செய்தியை நாம் ஒவ்வொரு முறை ரஜினிகாந்தின் படம் திரையரங்குகளில் வெளியாகும் போதும் பார்ப்போம். அந்த வகையில் இந்த முறை வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி படு ஜோராக விற்பனை நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ரசிகர்களிடையே விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் கூலி ஃபீவர் பண்டிகை போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்யும் சிங்கப்பூர் காவல் துறை:

படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்தப் படம் குறித்த அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் போஸ்டர்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் முன்னதாக வெளியான பவர் ஹவுஸ் என்ற பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் தமிழக ரசிகர்களிடம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சிங்கப்பூர் காவல் துறை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல்துறை அதிகாரிகளை வைத்து பவர் ஹவுஸ் பாடலுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கூலி படத்தில் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் ட்விட்டர்ல எல்லாம் கேட்ட கேள்வி இதுதான் – ஸ்ருதி ஹாசன் கலகல பேச்சு!

சிங்கப்பூர் காவல் துறை வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

Also Read… கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ருதி ஹாசனுக்கு ஸ்வீட் ஊட்டி விட்ட ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்