Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aan Paavam Pollathathu : ரியோ ராஜ்- மாளவிகா மனோஜின் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் முதல் சிங்கிள்!

Aan Paavam Polladathu Movie First Single : தமிழ் சினிமாவில் சின்னதிரையிலிருந்து நடிகரானவர்களில் ஒருவர்தான் ரியோ ராஜ். ஜோ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது. இப்படத்திலிருந்து முதல் பாடல் ஜோடிப் பொருத்தம் என்ற பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aan Paavam Pollathathu : ரியோ ராஜ்- மாளவிகா மனோஜின் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் முதல் சிங்கிள்!
ஆண் பாவம் பொல்லாததுImage Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 09 Jun 2025 21:26 PM

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்கள் ஒருவராக இருந்து வருபவர் ரியோ ராஜ் (Rio Raj). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஸ்வீட்ஹார்ட் (Sweetheart). இந்த படமானது கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த படமானது ரொமேன்டிக் காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது (Aan Paavam Pollathathu). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் (Kalaiyarasan Thangavel)  இயக்கிவருகிறார். இந்த படத்தை பற்றிய அறிவிப்புகள் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் இறுதியில் வெளியானது. இந்த படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் (Malavika Manoj) நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே ரியோவுடன் ஜோ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்த படமானது எதிர்பார்க்காத வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இவர்களின் கூட்டணியில்தான் இந்த ஆண்பாவம் பொல்லாதது படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திலிருந்து “ஜோடிப் பொருத்தம்” என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆண்பாவம் பொல்லாதது படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம்

இந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்து இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பிலிருந்துதான் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் ரியோவின் இந்த படத்தை டிரம்ஸ்டிக் ப்ரொடக்ஷ்ன் மற்றும் பிளாக் சீப் பைண்ட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் ரியோ ராஜ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தது வருகிறார். ரியோ ராஜின் இப்படமும் ஜோ படத்தை போல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியோ – மாளவிகாவின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதைக்களம் :

இந்த படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படமானது இல்லறத்து ஆண்களின் கஷ்டங்கள் பற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டைட்டிலில் படத்தின் கதை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த படமானது முற்றிலும் நகைச்சுவை, எமோஷன் மற்றும் காதல் நிறைந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இந்த 2025ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது இப்படம் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?
வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?...
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?...
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?...
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!...
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?...
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ...
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி...
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...