AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OTT Movies: படம் முழுக்க ட்விஸ்ட் .. ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்ற ஆக்‌ஷன் படம்!

டேவிட் ஃபின்ச்சர் இயக்கிய "தி கில்லர்" திரைப்படம், அலெக்சிஸ் நோலண்டின் பிரெஞ்சு கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது. மைக்கேல் ஃபாஸ்பெண்டர் நடிக்கும் இந்தத் திரில்லர், கொலைகாரனின் தந்திரமான செயல்களையும், எதிர்பாராத திருப்பங்களும் கொண்டதாக அமைந்தது. சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்புடன் கூடிய இப்படம், விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

OTT Movies: படம் முழுக்க ட்விஸ்ட் .. ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்ற ஆக்‌ஷன் படம்!
The Killer படம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 24 Jun 2025 09:53 AM IST

எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட படங்கள் சினிமா ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டு விடும். ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்கிறது ஒரு சுவாரஸ்யம் என்றால், அதனை பிற்பாதியில் விடுவிப்பது என்பது அதைவிட சூப்பராக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் ஹாலிவுட்டில் 2023 ஆம் ஆண்டு வெளியான தி கில்லர் (The Killer) படமாகும். டேவிட் ஃபின்ச்சரால் இயக்கப்பட்ட இந்த படத்திற்கு ஆண்ட்ரூ கெவின் வாக்கர் திரைக்கதை எழுதியிருந்தார். தி கில்லர் படமானது அலெக்சிஸ் நோலண்ட் எழுதிய பிரெஞ்ச் கிராஃபிக் நாவலான தி கில்லரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தி கில்லர் படத்தில் மைக்கேல் ஃபாஸ்பெண்டர், டில்டா ஸ்விண்டன், சார்லஸ் பார்னெல், ஆர்லிஸ் ஹோவர்ட்,கெர்ரி ஓ’மாலி, சோஃபி சார்லோட்,சாலா பேக்கர் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். எரிக் மெஸ்ஸெர்ஷ்மிட் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு
டிரென்ட் ரெஸ்னர், அட்டிகஸ் ரோஸ் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். இப்படத்தின் கதை மற்றும் இதர விவரங்கள் பற்றிக் காணலாம்.

படத்தின் கதை

மைக்கேல் ஃபாஸ்பெண்டர் கதைப்படி தி கில்லர் என அழைக்கப்படும் கொலை குற்றங்கள் செய்யக்கூடிய நபராவார். இவர் பாரிஸில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை குறிவைத்து தாக்க முயற்சிக்கிறான். ஸ்னைப்பர் துப்பாக்கியைப் பயன்படுத்தி அந்த ஹோட்டலின் குறிப்பிட்ட ஒரு அறைக்குள் வரும் நபரை கொல்ல அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது.

இலக்கிற்காகக் காத்திருக்கும் சமயத்தில் சாப்பிடுவது, போன் பேசுவது, பாடல் கேட்பது என வித்யாசமாக காட்சிப்படுத்தப்படுகின்றான். அவன் கொல்ல வேண்டிய நபர் வருகிறான்.ஆனால் குறி தவறி விடுகிறது. இதனையடுத்து எந்தவித சாட்சியமும் இல்லாமல் தப்பி ஓடுகின்றான். அங்கிருந்து அமெரிக்கா சென்று பின்னர் தன்னுடைய நாடான டொமினிக் குடியரசுக்கு செல்கிறான்.

இவன் சென்ற நேரம் அந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. காதலியை யாரோ தாக்கியிருக்கிறார்கள். தான் ஒரு 2 கொலையாளி நபர்களால் சித்திரவதை செய்யப்பட்டதாக காதலி கூறுகிறாள். இதனையடுத்து மைக்கேல் ஃபாஸ்பெண்டர் எப்படி அந்த நபர்களை கண்டறிகிறார். இதில் பரபரப்பான ட்விஸ்ட்கள் வெளிவருகிறது. கடைசியில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள்


இந்த படம் 2007 ஆம் ஆண்டு உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து தான் தி கில்லர் படமானது உருவானது. 2021 ஆம் ஆண்டு தொடங்கிய ஷூட்டிங் 2 ஆண்டுகள் இடைவெளியுடன் 2023ல் நிறைவடைந்து படம் வெளியானது. இப்படம் 85 சதவிகிதம் விமர்சகர்களிடையே நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது. நிச்சயம் தி கில்லர் படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த படமாக அமையும். இந்த படத்தை நாம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Follow Us