OTT Movies: நடுவானில் திக் திக் நிமிடங்கள்.. ஓடிடியில் பார்க்க சிறப்பான படம்!
ஜெரார்ட் பட்லர் நடித்த "பிளேன்" திரைப்படம், ஒரு விமானம் பிலிப்பைன்ஸில் அவசர தரையிறக்கம் செய்யும் சம்பவத்தையும், அங்கிருக்கும் கிளர்ச்சியாளர்களுடனான மோதல் பற்றியும் விவரிக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் ஒரு குற்றவாளி, உயிர் பிழைப்பதற்காக போராடும் பயணிகள் என நொடிக்கு நொடி பதற்றத்தை உண்டாக்கும் படமாக அமைந்துள்ளது.

சண்டை படம் என அழைக்கப்படும் ஆக்ஷன் சினிமா(Action Movies) யாருக்கு தான் பிடிக்காது. பல மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அப்படங்கள் வெளியாகவே செய்கின்றது. அந்த வகையில் ஹாலிவுட்டில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் பிளேன் (Plane). சார்லஸ் கம்மிங் மற்றும் ஜேபி டேவிஸ் ஆகியோர் எழுதிய திரைக்கதையை ஜீன்-ஃபிராங்கோயிஸ் ரிச்செட் திரைப்படமாக உருவாக்கியிருந்தார். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்தது. இந்த படத்திற்கு பிரெண்டன் கால்வின் ஒளிப்பதிவு செய்த நிலையில் டேவிட் ரோசன்ப்ளூம் இசையமைத்திருந்தார். பிளேன் படத்தில் ஜெரார்ட் பட்லர், மைக் கோல்டர், டோனி கோல்ட்வின், யோசன் ஆன்,டேனியலா பினெடா,லில்லி க்ரூக்,கெல்லி கேல்ஜோயி ஸ்லாட்னிக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் கதை, மற்றும் பிற தகவல்கள் பற்றி நாம் காணலாம்.
படத்தின் கதை
Plane (2023)
Streaming: February 3, 2023*
PVOD (Apple, Amazon, Google, etc.)
*Date Confirmed#PlaneMovie pic.twitter.com/EPPquHk7GG— WhenToStream.com (@WhenToStream) January 20, 2023
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரரான பிராடி டோரன்ஸ் 14 பயணிகள் மற்றும் மூன்று கேபின் குழு உறுப்பினர்களுடன் கூடிய விமானம் ஒன்றை சிங்கப்பூரிலிருந்து ஹொனலுலுவுக்கு டோக்கியோ வழியாக இயக்குகிறார். டிரெயில்பிளேசர் ஏர்லைன்ஸ் 119 என்ற பெயர் கொண்ட அந்த விமானத்தில் கொலை சந்தேக வழக்கில் சிக்கிய லூயிஸ் காஸ்பேரும் இருக்கிறார். இதனிடையே விமானம் செல்லும் பாதையில் தென் சீனக் கடல் மீது மோசமான வானிலை நிலவுவதாக பிராடி டோரன்ஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் அவர் தன் பாதையை மாற்றாமல் விமானத்தை செலுத்துகிறார். இப்படியான நிலையில் விமானத்தின் மீது பயங்கரமான மின்னல் தாக்குகிறது. இதனால் ஏற்படும் விமானத்தின் குலுக்கலில் ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் லூயிஸை அழைத்து செல்லும் கனடா போலீஸ் அதிகாரி இறக்கிறார்கள்.




இதனையடுத்து பிலிப்பைன்ஸில் உள்ள ஜோலோ தீவாக அறியப்படும் ஓரிடத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தீவிற்குள் உதவி தேடி பிராடி மற்றும் லூயிஸ் காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு ஏற்படும் மோதலில் கிளர்ச்சியாளர்களை இருவரும் கொல்கின்றனர். இதனால் கோபம் கொள்ளும் கிளர்ச்சியாளர்கள் குழு இரு பயணிகளை கொன்று மற்றவர்களை பணயக்கைதிகளாக அழைத்துச் செல்கின்றனர். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
படத்தின் பிற தகவல்கள்
இந்தப் படம் 2016 இல் அறிவிக்கப்பட்டு பல காரணங்களால் தடைபட்டு ஒருவழியாக 2023 ஆம் ஆண்டு தான் வெளியானது. நாவலாசிரியர் சார்லஸ் கம்மிங்கின் நாவலில் இருந்து இப்படத்தின் கதை எடுக்கப்பட்டது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூலிலும் சாதனைப் படைத்தது. அதேசமயம் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினரை குறைவாக மதிப்பிடும் காட்சிகளும் இடம் பெற்றதாக கண்டனம் எழுந்தது. இந்த பிளேன் படத்தை நாம் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.