AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OTT Movie: வயது மூத்த பெண்ணின் மீது ஆசைப்படும் பேய்.. விறுவிறுப்பாக இருக்கும் இந்த படத்தை பாத்திருக்கீங்களா? எந்த ஓடிடியில் இருக்கு தெரியுமா?

Horror Thriller OTT Movie: திரைப்பட ரசிகர்கள் திரையரங்குகளில் படங்களை எவ்வாறு ரசிகிறார்களோ அதைப்போல ஓடிடியில் வெளியாகும் படங்களையும் ரசித்துவருகிறார்கள். அந்த வகையில் ஓடிடியில் உள்ள ஹாரர் திரில்லர் மற்றும் காமெடியுடன் இருக்கும் படத்தை பார்க்க விரும்புகிறீர்களா? அப்போது இந்த படத்தை மறக்காமல் பாருங்க.

OTT Movie: வயது மூத்த பெண்ணின் மீது ஆசைப்படும் பேய்.. விறுவிறுப்பாக இருக்கும் இந்த படத்தை பாத்திருக்கீங்களா? எந்த ஓடிடியில் இருக்கு தெரியுமா?
ஹாரர் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Mar 2026 21:23 PM IST

சினிமாவில் ஆண்டுக்கு பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அதே சமயத்தில் ஓடிடியிலும் (OTT) நேரடியாக திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. ஹாரர், கிரைம் திரில்லர், காமெடி என பல்வேறு பாணியில் திரைப்படங்கள் ஓடிடியில் உள்ளது. அந்த வகையில் ஹாரர் மற்றும் காமெடியுடன் கலந்த முன்ஜ்யா படத்தை பார்த்திருக்கீங்களா? எந்த ஓடிடியில் உள்ளது என விவரமாக பார்க்கலாம். கடந்த 2024ம் ஆண்டில், நிரேன் பட் (Niren Bhatt) எழுத்தில், இயக்குநர் ஆதித்யா சர்போதார் (Aditya Sarpotdar) இயக்கத்திலும் வெளியான திரைப்படம்தான் முன்ஜ்யா (Munjya). இந்த படமானது பாலிவுட் சினிமாவில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அறிமுக நடிகர்களை கொண்டு இயக்கப்பட்டிருந்த இப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் நடிகர்கள் சத்யராஜ் (Sathyaraj), அபய் வெர்மா (Abhay Verma) மற்றும் ஷாவித்ரி போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது, கிட்டத்தட்ட பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படம் எந்த ஓடிடியில், எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கடைசி 30 நிமிடங்கள் கண்ணீரில் கலங்கடிக்கும்.. ஓடிடியில் வெளியான Couple Friendly எப்படி இருக்கு?

முன்ஜ்யா திரைப்படத்தின் கதைக்களம் :

இந்த முன்ஜ்யா திரைப்படத்தில், “கோட்யா” என்ற சிறுவன் தன்னைவிடவும் 7 வயது முத்த “முன்னி” என்ற பெண் மீது ஆசை படுகிறார். அவரைதான் திருமணம் செய்வேன் என்று தீராத ஆசையுடன் இருக்கிறான். ஆனால் அந்த கோட்யா திருமணம் செய்யவேண்டும் என நினைத்த முன்னி மற்றொருவருடன் திருமணம் செய்து சென்றுவிட்டார். இதனால் விரக்தியில் இருந்த கோட்யா, வினோத பூஜை செய்து தனது, தங்கையை பலிகொடுத்து, தனது காதலியான முன்னியை அடிந்துவிடலாம் என நினைத்து எல்லாவற்றையும் செய்கிறான். அந்த பூஜையின்போது கோட்யாவின் தங்கை “கீதா” தப்பித்து ஓடிவிடுகிறார். அதனால் கோட்யா தவறி கீழே விழுந்து இறக்கிறான். பின் அவன் முன்ஜ்யா என்ற பேயாக மாறுகிறான்.

இதையும் படிங்க: கருப்பு பட கதையை முதலில் விஜய் சாரிடம்தான் சொன்னேன் – உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி!

பின் தனது தங்கை கீதாவை பலிகொடுத்து முன்னியை அடையவேண்டும் என நினைத்த கோட்யா, பேயாக ஒரு தீவில் சிக்கிவிடுகிறான். பல ஆண்டுகளுக்கு பின் கீதாவின் பேரன் “பிட்டு” என்பவர் அந்த தீவில் சென்று தெரியாமல், அந்த முன்ஜ்யா பேயை விடுதலை செய்துவிடுகிறான். பின் அந்த முன்ஜ்யா பேய் தனது காதலியான முன்னியை அடைவதற்கு, என்னென்ன செய்கிறது என்பதே மீதி கதையாகும்.

முன்ஜ்யா திரைப்படம் எந்த ஓடிடியில் இருக்கிறது தெரியுமா? :

இந்த முன்ஜ்யா படமானது ஹாரர் திரில்லர் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கும். இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணிநேரம் 3 நிமிடம். இது தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் கிடைக்கிறது. இந்த படமானது ஓடிடியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இருக்கிறது. குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் ஒரு ஹாரர் திரைப்படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us