மமிதா பைஜுவா இது? இணையத்தில் வைரலாகும் பழைய வீடியோ!
Actress Mamitha Baiju: மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பலப் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் முன்னதாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

மமிதா பைஜு
நடிகை மமிதா பைஜூ (Actress Mamitha Baiju) மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வெளியான சர்வோபரி பாலக்காரன் என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடிகை மமிதா பைஜூ குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தொடந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மமிதா பைஜூ மலையாள சினிமாவில் பிறகு இரண்டாம் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அந்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் நஸ்லேனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்தப் படம் பிரேமலு. மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பிரேமலு படத்திற்கு பிறகு நடிகை மமிதா பைஜுவிற்கு பட வாய்ப்புகள் தென்னிந்திய சினிமாவில் குவியத் தொடங்கியது. குறிப்பாக தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க கமிட்டானார் நடிகை மமிதா பைஜூ. அதன்படி நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் டியூட். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது இப்படிதான்:
அதன்படி அந்த பழைய வீடியோவில் நடிகை மமிதா பைஜூ முற்றிலும் வேறாக இருக்கிறார். அந்தப் பேட்டியில் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பேசியுள்ளார். மேலும் தான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தனது தந்தையின் நண்பர் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் நடிகை மமிதா பைஜூ அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்படி மமிதா பைஜூவின் தோற்றம் மாறுபட்டு இருப்பதால் அந்த வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் வைல்கார்ட் போட்டியாளர்களாக வரும் பிரபல ஜோடி? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் மமிதா பைஜுவின் வீடியோ:
Also Read… 30 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் குருதிப்புனல் படம்