AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Leader Movie: மனுஷங்க மூலமாதான் என்ன நல்லதும் நடக்கும்.. லெஜெண்ட் சரவணாவின் ‘லீடர்’ பட ஆக்ஷன் ட்ரெய்லர் வெளியீடு!

Leader Action Trailer: தமிழில் பிரபல தொழிலதிபர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் லெஜண்ட் சரவணா. இவரின் நடிப்பில் தயாராகியுள்ள 2வது திரைப்படம்தான் லீடர். இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று (29/03/2026) இப்படத்தின் ஆக்ஷன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Leader Movie: மனுஷங்க மூலமாதான் என்ன நல்லதும் நடக்கும்.. லெஜெண்ட் சரவணாவின் ‘லீடர்’ பட ஆக்ஷன் ட்ரெய்லர் வெளியீடு!
லீடர் திரைப்பட அதிரடி டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Mar 2026 17:10 PM IST

சினிமாவில் தனது முதல் படத்தையே பெரிய பட்ஜெட்டில் தயாரித்து, அதில் நடித்து மக்களிடையே பேமஸ் ஆனவர் லெஜண்ட் சரவணா (Legend Saravana). இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல தொழிலதிபராக பிரபலமானவர். தனது லெஜண்ட் சரவணா நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் பேசப்பட்டிருந்தார். இதையடுத்து இவர் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் லெஜண்ட் (Legend). கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்த படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இதற்கு பின் இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் 2வது படமாக உருவாகியுள்ளதுதான் “லீடர்” (Leader). இதில் லெஜண்ட் சரவணா ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க, அவருடன் அம்ரிதா ஐயர், ஆண்ட்ரியா (Andrea), லால், விடிவி கணேஷ், பாயல் ராஜ்புட் (Payal Rajput), ஷாம், அசோக் பாண்டியன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஈட்டி, கருடன் மற்றும் எதிர்நீச்சல் போன்ற படத்தை இயக்கியிருந்த துறை செந்தில் குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் ஆக்ஷன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கதைக்காக அல்ல…தேதி கிடைக்கல – ஜி.வி.பிரகாஷ் தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

லெஜண்ட் சரவணாவின் லீடர் திரைப்படத்தின் ஆக்ஷன் ட்ரெய்லர் குறித்து வெளியிடப்பட்ட பதிவு:

லெஜண்ட் சரவணாவின் லீடர் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது, லெஜண்ட் சரவணா தனது முதல் படத்தை விடவும், இந்த படத்தில் மேலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதில் அவர் முழுவதுமாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். ஒரு தந்தை மற்றும் மகளுக்கும் இருக்கும் பாசம், மகளுக்காக எதையும் செய்யும் தந்தையாக லெஜண்ட் சரவணா நடித்துள்ளார். இப்படமும் அப்பா மற்றும் மக்களின் பாசம் குறித்த கதைக்களத்தில் தயாராகிவருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – ஷோபனா கம்போ.. தலைவர் 173 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை லெஜண்ட் சரவணாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் முழுவதும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இதன் வெளியீட்டிற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Follow Us