Entertainment News Live Updates: ரஜினிகாந்தை சந்தித்த கமல் ஹாசன்.. என்ன காரணம்?
Entertainment News in Tamil, 16 July 2025, Live Updates: மீபத்தில் திமுக உடன் கூட்டணி அமைத்த கமல் ஹாசன், ராஜ்ய சபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். பலரும் கமல் ஹாசனுக்கு வாழத்து தெரிவித்து வரும் நிலையில் அதனை தனது நீண்ட கால நண்பரான ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொள்ள நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா நேரலை
தமிழ் சினிமா தனது பயணத்தை 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் இயக்கிய “கீச்சக வாதம்” என்ற ஊமைப் படத்தின் மூலம் தொடங்கியது. இந்த ஆரம்பம், பின்னாளில் ஒரு பெரிய திரையுலக மரபாக வளர்ந்தது. நடிப்பு, இசை, தயாரிப்பு என தமிழ் சினிமா பல துறைகளில் முன்னேறி, பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் பலர் இந்தியாவின் பிற மொழிச் சினிமாக்களில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது. இன்று, தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் புதிய பட அறிவிப்புகள், இசை வெளியீடுகள், நடிகர் தகவல்கள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது வெறும் ஒரு பொழுதுபோக்கு துறையாக இல்லாமல், தமிழ் மக்களின் உணர்வுடன் நெருக்கமாக இணைந்த கலாச்சார உலகமாகவும், உலகமே அறிந்த பெரும் திரை மரபாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி சினிமா சார்ந்த விஷயங்களையும், திரையுலகில் நடக்கும் செய்திகளையும், சினிமா அப்டேட்களையும் இங்கு உடனுக்குடன் காணலாம். மேலும் புதுப்படம் தொடர்பான ரிவியூக்கள் மற்றும் ஓடிடியில் இருக்கும் படங்கள் தொடர்பான தகவல்களையும் இங்கு பெற முடியும்.
மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
LIVE NEWS & UPDATES
-
பாகுபலியை நானே கொன்றிருப்பேன்… ராணா டகுபதி கமெண்ட்!
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெளியான பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இரண்டு பாகங்களும் சேர்ந்து ஒரே படமாக வருகிற அக்டோபர் 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் பாகுபலி படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஒருவேளை பாகுபலியை கட்டப்பா கொல்லவில்லை என்றால் என்னவாகியிருக்கும் என கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த ராணா, பாகுபலியை நானே கொன்றிருப்பேன் என கமெண்ட் செய்துள்ளார்.
-
சிவகார்த்திகேயன் – தர்ஷனின் ஹவுஸ் மேட்ஸ் – டிரெய்லர் அப்டேட்!
சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் வெளியிடும் ஹவுஸ் மேட்ஸ் படத்தின் டிரெய்லர் ஜூலை 17 அன்று முதல் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடிக்க, காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 1, 2025 அன்று முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
-
லோகேஷ் கனகராஜின் மிஸ்டர் பாரத் படப்பிடிப்பு நிறைவு!
லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் மூலம் தயாரித்துள்ள மிஸ்டர் பாரத் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினருடன் இயக்குநர் லோகேஷ் கேக் வெட்டிக்கொண்டாடினார். பிரபல யூடியூபரான பாரத் நடித்துள்ள இந்தப் படத்தை நிரஞ்சன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெததீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
-
கமல்ஹாசன் படத்துக்கு இசையமைக்க வேண்டும் – 3BHK இசையமைப்பாளர் அம்ரித்
8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியான படம் 3BHK. இந்தப் படம் நல்ல விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த நிலையில் அம்ரித் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் என்றும் அவரது படத்துக்கு இசையமைக்க விருப்பம் என்றார்.
-
96 பட இயக்குநருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்!
வீர தீர சூரன் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் அடுத்த நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தை ‘96’ புகழ் இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
-
அதர்வாவின் டிஎன்ஏ – ஓடிடி ரலீஸ் தேதி அறிவிப்பு!
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த பதிவு!
-
இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ – இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பறந்து போ. இயக்குநர் ராமின் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இந்தப் படம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படம் 11 நாட்களில் ரூ.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நவீன தொழில்நுட்பத்துடன் ரீரிலிசாகவிருக்கிறது ரஜினிகாந்த்தின் பாட்ஷா!
இந்திய அளவில் ஒரு கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்து வருகிறது ரஜினிகாந்த்தின் பாட்ஷா. சத்யா மூவிஸ் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது 4கே மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் வருகிற ஜூலை 18, 2025 அன்று தமிழ்நாட்டில் மட்டும் 100 திரையறங்குகளில் வெளியாகவிருக்கிறது.
-
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் துப்பாக்கி வில்லன்!
தமிழில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்தின் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால். அதனைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் ஸ்ட்ரீட் ஃபைட்டர் (Street Fighter) என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
திரைப்படங்களுக்கு மூச்சு விட அவகாசம் தேவை: நடிகர் விஷால் வேண்டுகோள்!
‘ரெட் ஃபிளவர்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகும் போது 3 நாட்கள், குறைந்தத 12 காட்சிகள் அந்தப் படம் மூச்சு வாங்க அவகாசம் அளிக்க வேண்டும். அந்த காலக்கட்டத்தில் யூடியூப் சேனல்கள் திரையரங்கிற்குள் சென்று மக்களின் கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.
-
ரெடியா மாமே… குட் பேட் அக்லி பட பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக மாஸ் காட்சிகளுக்கு தனது இசை மூலம் ஜி.வி.பிரகாஷ் குமார் கூடுதல் வலு சேர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் பின்னணி இசை தயாராகி வருவதாக ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
-
சினிமா டிக்கெட் விலை ரூ.200க்கு மேல் இருக்க கூடாது – கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 200 ரூபாய்க்கு அதிகமாக இருக்க கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது மல்டிபிளெக்ஸ், சிங்கிள் ஸ்கிரீன், ஏசி, நான் ஏசி என அனைத்து திரையரங்குகளுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் விலையில் முறைக்கேடு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
-
கவினுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன் – வெளியான அறிவிப்பு!
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
-
கூலி படம் வெளியாகும் அடுத்த நாள் என்னுடைய பிளான் இதுதான்! – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்
ரஜினிகாந்த், ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் தொடர்பாக இவர் அளித்த பேட்டி ஒன்றில், கூலி படம் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் யாருக்கும் தெரியாத இடத்துக்கு சென்றுவிடுவேன். நான் எங்கே இருப்பேன் என யாருக்கும் சொல்ல மாட்டேன். திரும்பி வந்த பிறகே கூலி படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் குறித்து பார்ப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சூர்யா – ஆர்ஜே பாலாஜியின் கருப்பு – வெளியான அப்டேட்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக இந்தப் படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
மக்களுக்காக புதிய படம்… விடியல் ஆரம்பம் – இயக்குநர் சேரன் பகிர்ந்த தகவல்
இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் நரிவேட்ட என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தனது அடுத்தப் படம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயணம் துவங்குகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும்.ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காக தயாராகிறது. விடியல் ஆரம்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது புதிய படம் குறித்து இயக்குநர் சேரனின் எக்ஸ் பதிவு
இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயனம் தொடங்குகிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை.. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும். ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காக தயாராகிறது . விடியல் ஆரம்பம். pic.twitter.com/IEGpt8KH8o
— Cheran Pandiyan (@CheranDirector) July 16, 2025
-
தயாரிப்பு நிறுவனம் மீது ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் வழக்கு!
நடிகர் ரவி மோகன் தங்களிடம் இருந்து படம் நடித்து தருவாக ஒப்பந்தம் செய்து, ரூ.6 கோடி பெற்று, படம் நடிக்காமல் ஏமாற்றியதாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.இதுகுறித்து நடிகர் ரவி மோகன் தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை துவங்காமல் தமக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, ரூ. 9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்கவை உறுப்பினராக வருகிற ஜூலை 25, 2025 அன்று பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கும் என்னுடைய அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் @ikamalhaasan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். pic.twitter.com/K99sFlKOBR
— Rajinikanth (@rajinikanth) July 16, 2025
-
கமல்ஹாசனுக்கும் ஆமிர் கானுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்! – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சீக்ரெட்
கூலி படம் தொடர்பாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், “கமல் சார் மற்றும் ஆமிர் கான் இருவரும் நடிப்பில் ஒரே மாதிரியான அணுகுமுறையை கொண்டவர்கள். கமல் சாரிடம் நடிப்பில் நீங்கள் சிறிய திருத்தங்களை சொல்லினால் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவார். ஒரு காட்சிக்கு பல விதமாக நடித்துக் காட்டுவார். அதனால் எதனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படும். அதே மாதிரி தான் அமீர் கான் சாரும். இருவரிடம் நடிப்பில் சிறிய திருத்தங்களைக் கேட்டாலும் நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை காட்டுவார்கள் என்றார்.
-
என் திருமணம் தள்ளிப்போகிறது… – நடிகர் விஷால் தகவல்
ரெட் ஃபிளவர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகர் விஷால் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வருகிற ஆகஸ்ட் 29 எனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் எனது திருமணம் தள்ளிப்போகிறது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அங்கு நடைபெறும் முதல் திருமணம் என்னுடையதாகத் தான் இருக்கும். ஒன்பது வருடங்கள் தாக்கு பிடித்து விட்டேன். இன்னும் இரண்டு மாதங்கள் தான். ஆகஸ்ட் 29 ஆம் தேதி என் பிறந்த நாளில் நல்ல செய்தியை அறிவிப்பேன் என்று பேசினார்.
-
எளிமையாக வாக்கிங் போகும் ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் அடுத்த நடிக்கும் படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வேள்பாரி வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இப்படி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும் அவர், சென்னையில் எளிமையாக வாக்கிங் போகும் போட்டோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அவரது எளிமையை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
எளிமையாக வாக்கிங் போகும் ரஜினிகாந்த்தின் போட்டோ வைரல்
Morning walk vibes! #Superstar #Rajinikanth pic.twitter.com/5vWWPlzC5C
— Rajini✰Followers (@RajiniFollowers) July 16, 2025
-
எனக்கு தொடர் வாய்ப்பு கிடைப்பதற்கு காரணம் இதுதான் – சாய் அபயங்கர் விளக்கம்!
இதுவரை சாய் அபயங்கர் இசையமைத்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் தமிழில் ராகவா லாரன்ஸின் பென்ஸ், சூர்யாவின் கருப்பு, அட்லி – அல்லு அர்ஜூன் படம் என பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தமிழில் நல்ல இசையமைப்பார்கள் வாய்ப்பில்லாமல் இருக்கும் போது பாடகர் திப்பு மற்றும் ஹரினியின் மகன் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக பலரும் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க காரணம் நெட்வொர்க்கிங் என்றார். மேலும் பேசிய அவர், கட்சி சேரா பாடல் மூலமாக தனக்கு பென்ஸ் பட வாய்ப்பு வந்தது. அந்த பென்ஸ் படம் மூலம் எனது இசை குறித்து திரையுலகில் நல்ல பெயர் கிடைத்தது. அதன் மூலம் தான் எனக்கு வரிசையாக வாய்ப்புகள் அமைகின்றன என்றார்.
தனக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான காரணம் குறித்து சாய் அபயங்கர் பேசும் வீடியோ
Q: Audience might think, they haven’t seen any film of yours, but how you got huge Lineups❓#SaiAbhyankkar: It is not influencing, it’s networking. I got Benz opportunity from KatchiSera. From Benz & other projects, the WOM spread among people within industry about my music &… pic.twitter.com/9ilvRgV7GA
— AmuthaBharathi (@CinemaWithAB) July 16, 2025
-
ரஜினிகாந்தை சந்தித்த கமல் ஹாசன்.. என்ன விஷயம் தெரியுமா?
நடிகர் கமல் ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் சட்டமனற தேர்தலில் கோவையில் போட்டியிட்டார் ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. சமீபத்தில் திமுக உடன் கூட்டணி அமைத்த கமல் ஹாசன், ராஜ்ய சபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். பலரும் கமல் ஹாசனுக்கு வாழத்து தெரிவித்து வரும் நிலையில் அதனை தனது நீண்ட கால நண்பரான ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொள்ள நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்துடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசனின் எக்ஸ் பதிவு
புதிய பயணத்தை நண்பர் @rajinikanth உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன். pic.twitter.com/n9R4HgsxlC
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2025
-
தலைவன் – தலைவி படத்தின் ட்ரெய்லர் தேதி அறிவிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் – தலைவி படத்தின் ட்ரெய்லர் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 25 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை மந்த்ரா
90களில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக திகழ்ந்த நடிகை மந்த்ரா மீண்டும் மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.விரைவில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘உசுரே’ படம் வெளியாகவுள்ளது. வலிமையான கேரக்டர் என்றாலும் ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் பரவாயில்லை நடிக்க ரெடி என கூறியுள்ளார்.
-
சாணி அள்ளிய அதே கையால் தேசிய விருது வாங்கிய தருணம் – நடிகை நித்யா மேனன்..
தேசிய விருது வாங்கிய நாளுக்கு முன், தான மாட்டு சாணம் அள்ளியதாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ நான் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருது வாங்க செல்வதற்கு முதல் நாள் இந்த சாணம் அள்ளும் காட்சி படமாக்கி கொண்டிருந்தார். முதல் நாள் சாணம் அள்ளிய அந்த கை தான் மறுநாள் விருதை வாங்கியது. அது ஒரு மிகப்பெரிய உணர்வு தருணம் என சொல்லலாம்” என பகிர்ந்துள்ளார்.
-
காக்கா முட்டை படத்தில் நடிக்க இவர் தான் காரணம் – மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் காக்கா முட்டை எனவும் அதில் நடிக்க விஜய் சேதுபதி தான் காரணம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எனது வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் என்றாலே அது காக்கா முட்டை திரைப்படம். அந்த திரைப்படத்தில் நான் நடிப்பதற்குக் காரணமே விஜய் சேதுபதிதான். நான் மிகவும் குழப்பமாக இருந்தேன், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு நிறைய யோசித்தேன். அப்போதுதான் விஜய் சேதுபதி என்னிடம், நீங்கள் நிச்சயமாக அந்த திரைப்படத்தில் நடிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
-
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..
பாலிவுட்டின் பிரபல ஜோடியான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். கியாரா அத்வானி அடுத்து ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து வார் 2 படத்தில் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் வார் 2 ஆகஸ்ட் 14, 2025 அன்று பெரிய திரைகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
பிரபல நடிகரான ரவி மோகன் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். இந்நிலையில் தான் 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் ஷூட்டிங் தொடங்கவில்லை என பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் மீது ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கைதி 2 தான் அடுத்த படம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..
நிறைய படங்கள் கையில் இருந்தாலும், தனக்கு எப்போதும் மாஸ்டர் 2 மற்றும் லியோ 2 திரைப்படத்தை இயக்குவதே விருப்பம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தற்போது, ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தை இயக்கி படப்பிடிப்பு முடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படமாக கைதி 2 இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
-
ஜூலை 18ல் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
ஒவ்வொரு வாரமும் புது திரைப்படங்கள் ரிலீசாகி வருகின்றன. அதன்படி, வரும் ஜூலை 18ம் தேதி தியேட்டர்களில் சிறு பட்ஜெட் படங்கள் சில ரிலீஸாகவுள்ளன. பன் பட்டர் ஜாம்,ட்ரெண்டிங்,டைட்டானிக்,கெவி,சென்ட்ரல் உள்ளிட்ட படங்கள் அந்த லிஸ்டில் உள்ளன. சமீபத்தில் சிறு பட்ஜெட் படங்கள் சில வெற்றியடைந்து வருவதை அடுத்து இந்த வாரம் ரேஸில் ஜெயிக்கவுள்ள படம் எதுவென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
-
நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும், நடிகையுமான தன்யா ரவிச்சந்திரன் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் கௌதம் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்யா ரவிச்சந்திரன் விஜய் சேதுபதியின் கருப்பன் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜீவா படத்தின் அப்டேட்
நடிகர் ஜீவாவின் நடிப்பில் ஏற்கனவே வெளியான பிளாக் படம் அனைவரையும் கவர்ந்தது. வித்தியாசமான திரைக்கதையில் இப்படம் உருவாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணிதான் இயக்கினார். இந்நிலையில் அதே இயக்குநருடன் ஜீவா மறுபடி இணையவுள்ளார்.
-
கொஞ்சம் விட்டாலும் சீரியலாகிவிடும் – பாண்டிராஜ்
இது குறித்து பேசிய பாண்டிராஜ், குடும்ப கதைக்களம் கொண்ட படங்களை எடுப்பதே மிக பெரிய சவால்தான். குடும்ப படம் எடுப்பது கஷ்டம்தான். கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாறிவிடும். ஆனால் இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எல்லாமே குடும்ப திரைப்படங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றார்
-
குடும்ப படம் குறித்து பாண்டிராஜ் கருத்து
தலைவன் தலைவி படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ் மக்கள் குடும்ப படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.
-
அடுத்த படமாகக் கைதி 2 படம் – லோகேஷ்
மேலும் பேசிய அவர், “கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நிறையப் படங்கள் எனது கைவசத்தில் இருக்கிறது. அடுத்த படமாகக் கைதி 2 படம் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனுடனும் விக்ரம் 2 படத்தையும் இயக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் லியோ 2 மற்றும் மாஸ்டர் 2 திரைப்படத்தை இயக்க ஆசைப் படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
-
படம் குறித்து லோகேஷ் சொன்ன ஆசை!
ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் தன்னுடைய சினிமா ஆசை குறித்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் தனக்கு எப்போதும் மாஸ்டர் 2 மற்றும் லியோ 2 திரைப்படத்தை இயக்குவதற்கு ஆசையாக இருப்பதாகக் கூறியுள்ளார்
-
ஸ்டண்ட் மாஸ்டர் மறைவுக்கு உருக்கமாக பதிவிட்ட பா.ரஞ்சித்
வேட்டுவம் படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் கடந்த 2025, ஜூலை 13ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறப்பிற்கு, இயக்குநர் பா. ரஞ்சித் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்
-
சௌபின் சாஹிர் ரோலில் நடிக்கவிருந்த நடிகர்கள்!
ரஜினிகாந்தின் கூலி படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இணைந்து நடித்துள்ளார். அவர் டான்ஸ் வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சௌபின் சாஹிர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் ஃபகத் பாசில்தான் என இயக்குநர் லோகேஷ் தெரிவித்துள்ளார்