Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Entertainment News Live Updates: இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்..

Entertainment News in Tamil, 18 July 2025, Live Updates: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அவர் நடிக்கும் புதுப்படத்தை சண்டை கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளன. இந்நிலையில் அப்படத்தில் நடிக்கவுள்ள நடிகைகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

C Murugadoss
C Murugadoss | Updated On: 18 Jul 2025 11:43 AM
Entertainment News Live Updates: இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்..
தமிழ் சினிமா அப்டேட்ஸ்

LIVE NEWS & UPDATES

  • 18 Jul 2025 11:43 AM (IST)

    நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படம்.. நாளை டீசர் வெளியீடு..

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வந்த ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

  • 18 Jul 2025 10:57 AM (IST)

    Coolie Movie Update: கூலி படத்தின் 3 வது பாடலை வெளியிட படக்குழு திட்டம்..

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் 3வது பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தில் வைரலாகும் நிலையில், மூன்றாவது பாடல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

  • 18 Jul 2025 10:18 AM (IST)

    இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்..

    இயக்குனர் வேலு பிரபாகரன் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 18, 2025 தேதியான இன்று காலமானார். கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • 18 Jul 2025 10:04 AM (IST)

    ஆகஸ்டில் ஷூட்டிங் செய்ய திட்டம்

    இயக்குநர் ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் இப்படம் அதிரடி காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்டில் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தில் கமிட்டாகவுள்ள கல்யாணி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது

  • 18 Jul 2025 09:40 AM (IST)

    கமலுடன் நடிக்கவுள்ள கல்யாணி

    நடிகர் கமல்ஹாசனின் 237வது படத்தை சண்டைகலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளனர். இந்த படத்தில் மலையாள நாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 18 Jul 2025 09:21 AM (IST)

    கிங்காங் வீட்டுக்கே சென்ற சிவகார்த்திகேயன்

    நடிகர் கிங்காங் மகளின் திருமணத்துக்கு வருகைதர முடியாத நிலையில் அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். கிங்காங் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். சிவகார்த்திகேயன் வருகையால் மகிழ்ச்சியடைந்த கிங்காங், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

  • 18 Jul 2025 09:02 AM (IST)

    செல்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்?

    பகத்தின் தொலைபேசியானது, பிரீமியம் டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சபையர் படிகம் மற்றும் கையினால் தைக்கப்பட்ட தோல் போன்ற பல்வேறு விஷயங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த விலை என கூறப்படுகிறது

    Read More

  • 18 Jul 2025 08:42 AM (IST)

    Fahadh Faasil Mobile : பகத் போன் ரூ.5 லட்சமா?

    பகத் பயன்படுத்தும் போன் 17 வருடப் பழமையான போன் என கூறப்படும் நிலையில், அதன் விலையும் அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. அது ஸ்மார்ட் போன் கிடையாது. சாதாரண போன் மாதிரி இருந்தாலும், அந்த செல்போனின் விலை சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது

  • 18 Jul 2025 08:29 AM (IST)

    2 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ்

    அதர்வாவின் இந்த படத்தை, இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ளார். அன்னம் பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.   சுமார் 2 வருடங்களுக்குப் பின் தற்போது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்

    Read More

  • 18 Jul 2025 08:16 AM (IST)

    Thanal Movie Release Date : அதர்வா பட அப்டேட்

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர முரளி. இவரின் மூத்த மகள் நடிகர் அதர்வா. இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ள நிலையில், இவரின் நடிப்பில் உருவாகிவந்த புது படம்தான் தணல் இந்த படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 29 தேதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 18 Jul 2025 08:01 AM (IST)

    விரைவில் வெளியாகவுள்ள கிங்டம் திரைப்படம்

    விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் புரோமோஷன் பணியில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டிருந்தபோது, திடீரென டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    Read more

  • 18 Jul 2025 08:00 AM (IST)

    Vijay Deverakonda Health : விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு.. தொடரும் சிகிச்சை!

    முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் விதமாக இந்த லைவ் பிளாக் உதவும். நேற்றைய சினிமா அப்டேட்களை பொருத்தவரை,  டெங்கு காய்ச்சல் காரணமாக, நடிகர் விஜய் தேவரகொண்டா, (Vijay Deverakonda) தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், விரைவில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம். அதேபோல புதுப்பட ரிலீஸ் தொடர்பான செய்திகள், புதுப்படங்களுக்கும் வரும் ரிவியூ மற்றும் ரிவிட்டர் ரிவியூக்களை இங்கு பார்க்கலாம்.

தமிழ் சினிமா வரலாற்றை பொருத்தவரை, தனது பயணத்தை 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் இயக்கிய “கீச்சக வாதம்” என்ற ஊமைப் படத்தின் மூலம் தொடங்கியது. இந்த ஆரம்பம், பின்னாளில் ஒரு பெரிய திரையுலக மரபாக வளர்ந்தது. நடிப்பு, இசை, தயாரிப்பு என தமிழ் சினிமா பல துறைகளில் முன்னேறி, பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் பலர் இந்தியாவின் பிற மொழிச் சினிமாக்களில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.

சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற க்ளிக் செய்க

Published On - Jul 18,2025 7:57 AM