இரண்டு வானம் எனது முந்தைய படத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் – இயக்குநர் ராம்குமார்
Director Ramkumar talks about Irandu Vaanam Movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறு படங்களை இயக்கி பிரபலம் ஆனவர் இயக்குநர் ராம் குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரண்டு வானம்
தமிழ் சினிமாவில் முண்டாசுப்பட்டி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ராம் குமார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ராட்சசன் என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் ராம்குமார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இப்படி ஒரு த்ரில்லரான படம் என்று மிகவும் பாராட்டவும் செய்தனர். முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்குமே மிகப் பெரிய வித்யாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம் குமார் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் இரண்டு வானம்.
இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து உள்ளார். நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான சில அப்டேட்களை இயக்குநர் ராம் குமார் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இரண்டு வானம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்:
அதன்படி இயக்குநர் ராம் குமார் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, ‘இரண்டு வானம்’ திரைப்படம் எனது முந்தைய படத்திலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும். இப்படம் ஒரு உணர்வுபூர்வமான காதல் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணையும், வாழ்க்கையை எப்போதும் கலகலப்பாகவும் எவ்விதக் கவலையுமின்றியும் வாழ விரும்பும் ஒரு பையனையும் மையமாகக் கொண்டே இக்கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில், முற்றிலும் மாறுபட்ட இயல்புடைய இவ்விருவரும் சந்திக்கின்றனர். அவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் இருந்தபோதிலும், இறுதியில் அவர்கள் எவ்வாறு வாழ்வில் ஒன்றிணைகிறார்கள் என்பதைப் பற்றியதே இக்கதையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… Suriya: கோவையில் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!
இணையத்தில் வைரலாகும் ராம் குமாரின் பேச்சு:
Director #Ramkumar Recent:
– #IranduVaanam will be very different from my previous film. This movie is shaped as an emotional love story. The story revolves around a girl who strongly believes in social justice and a boy who always wants to live life in a fun and carefree way.… pic.twitter.com/xJ4XoFMiXq
— Movie Tamil (@_MovieTamil) May 7, 2026
Also Read… இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்