கோலிவுட் முதல் பாலிவுட் வரை… தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்
Celebrities extend their wishes to Thalapathy Vijay: 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இதற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றி சான்றிதழ் பெற செல்லும் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழக அரசியலிலும் நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து இருந்தாலும் பான் இந்திய அளவில் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். தொடர்ந்து இவரது படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தனது சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு தமிழக அரசியலில் களம் இறங்கினார். இவர் சினிமாவை விட்டது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர் அரசியலில் களமிறங்கியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனத்தையும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் அறிமுகம் ஆகி மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து உள்ளார் என்பது மக்களின் பேட்டிகளில் தொடர்ந்து தெரிந்து வந்தது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வரும் நிலையில் தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகிக்கிறார். இந்த நிலையில் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) 🙂
Hope great things follow for the people of Tamil Nadu…— Nani (@NameisNani) May 4, 2026
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் நானி தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Oru Viral Puratchi.. Whistle Podu..!!! @actorvijay woohooooooo… !!! The people have spoken.. so many have tried for decades.. but you have proved that if the people want the power is theirs..looking forward to change and prosperity of our tamilians.. congratulationssss..!!!!… pic.twitter.com/fgleEVqjX1
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) May 4, 2026
சர்க்கார் படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு விரல் புரட்சி.. விசில் போடு.. தளபதி விஜய் வூஹூஹூஹூ… !!! மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டார்கள்.. பல தசாப்தங்களாக எத்தனையோ பேர் முயன்று பார்த்தார்கள்.. ஆனால் மக்கள் விரும்பினால் அதிகாரம் அவர்களிடமே இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்.. நம் தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தையும் செழிப்பையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
‘இது ரீலு இல்ல ரியலு’@TVKVijayHQ na 🔥🔥 pic.twitter.com/03mkKWPU1h
— Mohan Raja (@jayam_mohanraja) May 4, 2026
இயக்குநர் மோகன் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் இது ரீலு இல்ல ரியலு விஜய் அண்ணா என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Master the BLASTER 💛
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) May 4, 2026
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் தளபதி விஜயின் படத்தின் வசனமான மாஸ்டர் தி ப்ளாஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Heartfelt wishes to the President of Tamilaga Vettri Kazhagam, Mr. Vijay
He is the #Jananagan and real hero of our film fraternity, who has arrived to uplift our Tamil film industry and the people of Tamil Nadu.Time to lead.
#TamilagaVettriKazhagam #TVKVijay pic.twitter.com/ajf7DMvQYu
— Seenu Ramasamy (@seenuramasamy) May 4, 2026
இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழக வெற்றி கழகத்தின்’ தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு, என் உளமார்ந்த நல்வாழ்த்துகள். நமது தமிழ் திரையுலகத்தையும், தமிழக மக்களையும் மேம்படுத்தும் நோக்கோடு களமிறங்கியிருக்கும் அவர், ஒரு ‘ஜன நாயகன்’ என்பதோடு, நமது திரையுலகின் உண்மையான கதாநாயகனும் ஆவார்.
Also Read… சிறை பட அனிஷிமா அனில்குமாரின் அடுத்த திரைப்படம்… ஹீரோ யார் தெரியுமா?
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Blastu! Blastu!💥💥
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) May 4, 2026
தொடர்ந்து தனது குடும்பத்தில் அப்பா மற்றும் தங்கை இருவரும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசி வந்த நிலையில் எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் ஆதரவு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் விஜய் முன்னிலை வகிப்பதை கொண்டாடி வருகின்றார்.
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Congrats @TVKVijayHQ na . This is huge . And a historical victory 🔥 never before never after 🔥 @actorvijay
— G.V.Prakash Kumar (@gvprakash) May 4, 2026
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும் இது ஒரு வரலாற்று வெற்றி என்றும் எப்போதும் இல்லாத வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… ஜனநாயகன் பட லீக் விவகாரம்.. கைதான 9 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:
Congratulations to @actorvijay 🙌🏼
The faith people have in you is amazing to see. More power to you for this next chapter!💪🏻— Tiger Shroff (@iTIGERSHROFF) May 4, 2026
பாலிவுட்டில் முன்னணி நடிகராக் வலம் வருபவர் நடிகர் டைகர் ஷெராஃப். இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காண்பதற்கு மிகவும் வியக்கத்தக்கதாக உள்ளது. உங்கள் வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்திற்கு, மேலும் பலமும் வெற்றியும் சேரட்டும் என்று தெரிவித்துள்ளார்.