Athrvaa : நிச்சயம் ஸ்ரீ லீலாவை நல்ல நடிகையாகப் பார்ப்பார்கள் – நடிகர் அதர்வா ஓபன் டாக்!
Athrvaa Talk About Sreeleela : நடிகர் அதர்வாவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இந்த படமானது தனுஷின் குபேரா படத்துடன் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட அதர்வா, பராசக்தி படத்தில் டோலிவுட் நடிகை ஸ்ரீலீலாவுடன் நடித்த அனுபவம் பற்றிப் பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் இளம் நடிகராகத் திரைப்படங்களில் நடித்து வருபவர் அதர்வா (Athrvaa) . இவர் பிரபல தமிழ் நடிகர் முரளியின் (Murali) மூத்த மகன் ஆவார். இவரும் தனது தந்தையைப் போல சினிமாவில் முன்னணி நடிகராகப் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ (DNA). இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் மற்றும் ஃப்ரஹானா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து 4வது திரைப்படமாக இந்த டிஎன்ஏ படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
அதில் முன்னணி ரோலில் நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இவர் சித்தா படத்தில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்து பேசிய அதர்வா நடிகை ஸ்ரீலீலாவுடன் (Sreeleela) நடித்த தருணம் மற்றும் அவரின் நடிப்பைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.




அதில் அவர், “ஸ்ரீலீலாவை பற்றிச் சொல்லப்போனால் நிறைய விஷயங்கள் இருக்கிறது, தெலுங்கு படங்களைத் தாண்டி இப்படத்தின் ஸ்ரீலீலாவை சிறந்த நடிகையாகப் பார்ப்பார்கள்” என்று நடிகர் அதர்வா கூறியிருக்கிறார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
நடிகர் அதர்வா, ஸ்ரீலீலா குறித்து பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகர் அதர்வாவிடம் ஸ்ரீ லீலாவுடனான காட்சிகள் மற்றும் அவருடன் நடித்ததைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் அதர்வா, “பராசக்தி திரைப்படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் முடிந்துவிட்டது, அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் கூடிய சீக்கிரம் ரசிகர்களிடையே இந்த படம் எப்படி வரவேற்கப்படுகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளவே நான் ஆர்வமாக இருக்கிறேன்.
மேலும் ஸ்ரீலீலாவை பற்றிப் பேசுவதற்கு நிறைய இருக்கிறது, அந்த படம் வரும்போது 100 சதவீதம் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்று தெரியவரும். மேலும் பராசக்தி படத்தின் ஷூட்டிங் நடந்தவரைக்கும் ஸ்ரீ லீலாவுடன் பல அனுபவங்கள் இருக்கிறது. நடிகை ஸ்ரீலீலா நடித்த தெலுங்கு படங்களை விடவும், இந்த படத்தில் அவரை ஒரு நல்ல நடிகையாகப் பார்ப்பார்கள் அதுதான் நான் இப்போது சொல்ல விரும்புகிறேன் என்று நடிகர் அதர்வா ஒபனாக கூறியிருந்தார்.
அதர்வா, ஸ்ரீ லீலாவை பற்றிப் பேசிய வீடியோ :
“I was very excited after reading #Parasakthi script🤩. 60% of the film already completed. We are feeling very proud & happy with the output which came so far👌🔥. #SreeLeela will shine as an actor, more than the Telugu films she done so far🌟”
– #Atharvaapic.twitter.com/xcKZThPqdS— AmuthaBharathi (@CinemaWithAB) June 18, 2025
பராசக்தி திரைப்படம் ;
இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக நடித்துவரும் படம் பராசக்தி. இப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிகர்கள் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது 1965ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை இப்படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இப்படமானது 2026, ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.