Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush In Kuberaa : அதிரடி நாயகனாக தனுஷ்.. குபேரா படத்தில் நடிக்க எத்தனை கோடி சம்பளம்? வெளியான தகவல்

Dhanush Salary In Kuberaa Movie : நடிகர் தனுஷின் நடிப்பில் ரிலீஸிரிற்கு காத்திருக்கும் திரைப்படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Dhanush In Kuberaa : அதிரடி நாயகனாக தனுஷ்.. குபேரா படத்தில் நடிக்க எத்தனை கோடி சம்பளம்? வெளியான தகவல்
நடிகர் தனுஷ் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 20 Jun 2025 09:57 AM

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கத்தில் உருவாகியிருக்கும் பான் இந்திய திரைப்படம்தான் குபேரா (Kuberaa). நடிகர் தனுஷின்  (Dhanush ) 51வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படமானது தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையான ரோலில் நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) இணைந்து நடித்துள்ளார். இந்தப் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. அரசியல் மற்றும் குற்றம் திரில்லர் போன்ற கதைகளுடன் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இதுவரை நடித்திடாத பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என பல அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த படமானது சுமார் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் எத்தனை கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த குபேரா படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் சுமார் ரூ. 30 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தி  சினிஉலகம் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

தனுஷின் குபேரா படமானது யு/ ஏ தரச் சான்றிதழைப் பெற்ற பதிவு :

நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷார்ப் என பல பிரபலங்கள் இந்த குபேரா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் நிலையில், காசி மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

அரசியல் பின்புலன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சென்சார் யு/ ஏ தர சான்றிதழைக் கொடுத்துள்ளது. மேலும் இந்தக் குபேர அப்படமானது சுமார் 3 மணி நேரம் மற்றும் 1 நிமிட ரன்னிங் தாய்மையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா எதிர்பார்ப்பு :

இப்படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமாக நடித்திருக்கும் நிலையிலும், மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவின் போது நடிகர் தனுஷ் உறுதியாகக் கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் தனுஷின் ஜோடி முதன் முறையாக இணைந்திருக்கிறது. இந்த குபேரா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.