Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டூரிஸ்ட் ஃபேமிலி போல தமிழில் வெளியான ஃபீல் குட் படங்களின் லிஸ்ட் இதோ!

Feel Good Movies In Tamil: தமிழ் சினிமாவில் தற்போது மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஃபீல் குட் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் வெளியான் ஃபீல் குட் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

டூரிஸ்ட் ஃபேமிலி போல தமிழில் வெளியான ஃபீல் குட் படங்களின் லிஸ்ட் இதோ!
டூரிஸ்ட் ஃபேமிலிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 12 May 2025 19:00 PM

டூரிஸ்ட் ஃபேமிலி: நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடித்தப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் (Actress Simran) நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பிரபலங்களும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழில் வெளியான சிறப்பான் ஃபீல் குட் படம் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மெய்யழகன்: இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்சினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, கருணாகரன், இளவரசு, சரண் சக்தி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

ஓ மை கடவுளே: நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்தப் படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தை இயகுநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இதில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடிகர்கள் ரித்திகா சிங், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

குட் நைட்: நடிகர் மணிகண்டன் நடிப்பில் மே மாதம் 12-ம் தேதி 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குட் நைட். இந்தப் படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து நடிகர்கள் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரைச்சல் ரபேக்கா, பாலாஜி சக்திவேல் மற்றும் பகவதி பெருமாள் என பலர் நடித்திருந்தனர். குரட்டையை மையமாக வைத்து வெளியானை இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வாகும் திராட்சை விதை எண்ணெய்?
முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வாகும் திராட்சை விதை எண்ணெய்?...
பீச்சில் சுற்றுலாப் பயணிகளை விமானத்தின் மூலமாக பறக்கவிட்ட விமானி!
பீச்சில் சுற்றுலாப் பயணிகளை விமானத்தின் மூலமாக பறக்கவிட்ட விமானி!...
இந்தியர்களை தொடர்புகொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள்?
இந்தியர்களை தொடர்புகொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள்?...
இது உண்மையான அனகோண்டாவா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இது உண்மையான அனகோண்டாவா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!...
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்!
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்!...
இன்றுடன் முடிந்த கூவாகம் திருவிழா.. அதன் வரலாறு என்ன..?
இன்றுடன் முடிந்த கூவாகம் திருவிழா.. அதன் வரலாறு என்ன..?...
நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான்- கே.எஸ். ரவிக்குமார்!
நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான்- கே.எஸ். ரவிக்குமார்!...
ரஜினியின் கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?
ரஜினியின் கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?...
அணு ஆயுதப் போர்... இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து டிரம்ப்
அணு ஆயுதப் போர்... இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து டிரம்ப்...
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் - பிரதமர் மோடி அதிரடி
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் - பிரதமர் மோடி அதிரடி...
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக முடியாது! பாகிஸ்தான் குறித்து PM மோடி
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக முடியாது! பாகிஸ்தான் குறித்து PM மோடி...