Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

Retro Movie OTT Release: பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ரெட்ரோவின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அதன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தின் புதிய ஓடிடி ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 May 2025 20:32 PM

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான இந்தப் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றியை ருசித்ததால் அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்தார் என்பதை விட ருக்மணியாக வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி:

நடிகர் சூர்யாவின் நடிப்பில் 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முன்னதாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1-ம் தேதி படத்தின் ஓடிடி வெளியீடு இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அதனைத் தொடர்ந்து படம் வருகின்ற 31-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டே ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் படம் 30-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டே வெளியாகும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாவதற்கு முன்பு இது கேங்ஸ்டர் படமா இல்லது காதல் படமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தப் போது இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம். அதனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை - காரணம் என்ன?
கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை - காரணம் என்ன?...
இந்த வாரம் தியேட்டரை விட ஓடிடிதான் மாஸ்... யார் படம் பார்க்க போறீ
இந்த வாரம் தியேட்டரை விட ஓடிடிதான் மாஸ்... யார் படம் பார்க்க போறீ...
20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனை: வியப்பில் ஆழ்த்தும் ஏஐ கருவி
20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனை: வியப்பில் ஆழ்த்தும் ஏஐ கருவி...
போக்குவரத்து ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு - தமிழ்நாடு அரசு
போக்குவரத்து ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு - தமிழ்நாடு அரசு...
தென்காசி திருமலை குமாரசாமி கோவிலில் மோகன்லால் வேல் காணிக்கை!
தென்காசி திருமலை குமாரசாமி கோவிலில் மோகன்லால் வேல் காணிக்கை!...
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் படத்தில் டைட்டில் வீடியோ இதோ
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் படத்தில் டைட்டில் வீடியோ இதோ...
இறுதிப்போட்டியில் இடம்பிடித்த பெங்களூரு.. பஞ்சாப் பரிதாப தோல்வி!
இறுதிப்போட்டியில் இடம்பிடித்த பெங்களூரு.. பஞ்சாப் பரிதாப தோல்வி!...
100 மீ தடை ஓட்டம்.. தடையை உடைத்து தங்கத்தை தூக்கிய ஜோதி யாராஜி!
100 மீ தடை ஓட்டம்.. தடையை உடைத்து தங்கத்தை தூக்கிய ஜோதி யாராஜி!...
மே 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
மே 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன?...
மொழி சர்ச்சை : கமலுக்கு ஆதரவாக பதிவிட்ட நடிகை திவ்யா!
மொழி சர்ச்சை : கமலுக்கு ஆதரவாக பதிவிட்ட நடிகை திவ்யா!...
சாய் சுதர்சனுக்கு பேட்டிங் நுட்பம் இல்லையா? பயிற்சியாளர் பகீர்!
சாய் சுதர்சனுக்கு பேட்டிங் நுட்பம் இல்லையா? பயிற்சியாளர் பகீர்!...