Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தக் லைஃப் படத்தில் கமல் – த்ரிஷா வயது வித்யாச சர்ச்சை… இயக்குநர் மணிரத்னம் விளக்கம்

Director Maniratnam: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. அதில் முக்கியமானது அதிக வயது விதயாசத்தில் இருக்கும் கமல் ஹாசன் மற்றும் த்ரிஷா இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சி தான்.

தக் லைஃப் படத்தில் கமல் – த்ரிஷா வயது வித்யாச சர்ச்சை… இயக்குநர் மணிரத்னம் விளக்கம்
மணிரத்னம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 May 2025 14:42 PM

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்கள் தற்போது பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர். இவரக்ளுடன் இணைந்து நடிகரக்ளை த்ரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், சான்யா மல்கோத்ரா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய தக் லைஃப் பட ட்ரெய்லர்:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் கடந்த 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லரில் நடிகர் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளார். மேலும் கமல் ஹாசனின் மனைவியாக நடிகை அபிராமி நடித்துள்ளார்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த ட்ரெய்லரில் வயது முதிர்ந்த நடிகர் கமல் ஹாசன் இளம் வயது நடிகை த்ரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் 30 வயது பெரிய நபருடன் எப்படி இப்படி நடிக்க முடிகிறது என்று ரசிகர்கள் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த மணிரத்னம்:

தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இந்தப் படத்தில் வந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, நிஜ வாழ்க்கையில் வயது குறைவான நபர்களுடன் மற்றொருவர் அது ஆணோ அல்லது பெண்ணோ இருவரும் வாழ்ந்து வருவது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. இது நமது சமூகத்தில் புதிதான விசயம் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது தற்போதும் நடைமுறையில் உள்ளது.

மேலும் நீண்ட காலமாகவே சமூகத்தில் நிலவும் ஒரு விசயம் சினிமாவில் காட்டப்படும் போது அது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. சமூகத்தில் உங்களை சுற்றி நடக்கம் விசயத்தை மறைத்தும் உங்கள் கண்களை மூடிக்கொண்டும் நீங்கள் இப்படித்தான் படங்களை எடுக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.