பராசக்தி டைட்டிலை விட்டுகொடுக்க இதுதான் காரணம்… விஜய் ஆண்டனி விளக்கம்
Vijay Antony : நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்கன். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பராசக்தி படத்தின் டைட்டிலை விட்டு கொடுக்க காரணம் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் 2005-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு நீண்ட கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. குறிப்பாக தான் இசையமைக்கும் பாடல்களுக்கு இடையே புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனியின் இசையில் ஹிட் அடித்தப் படங்கள்:
விஜய் ஆண்டனி இசையில் வெளியான டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், அவள் பெயர் தமிழரசி, அங்காடித் தெரு, உத்தம புத்திரன், வெடி, வேலாயுதம், நான், பிச்சைகாரன், சலீம், மத கஜ ராஜா ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




இசையமைப்பாலர் டூ நடிகர்:
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உச்சத்தில் இருக்கும் போதே நடிப்பு துறையில் குதித்தார் விஜய் ஆண்டனி. அதன்படி அவர் 2006-ம் ஆண்டு முதல் கேமியோ ரோலில் நடித்து வந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், தமிழரசன், பிச்சைகாரன் 2, கொலை, ரத்தம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் மார்கன்:
இந்த நிலையில் தற்போது இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரக்கனி, பிரிகிதா சாகா, அஜய் திஷன், மகாநதி சங்கர், தீப்ஷிகா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள நிலையில் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி டைட்டில் குறித்து விஜய் ஆண்டனியின் பேச்சு:
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு முன்னதாக பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்து வைத்து இருந்தது படக்குழு. ஆனால் இந்த தலைப்பை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்திற்கு அறிவித்ததால் விஜய் ஆண்டனியின் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.
ஆனால் எந்த வித சலசலப்பையும் ஏற்படுத்தாத விஜய் ஆண்டனியின் படக்குழு அந்த தலைப்பை மாற்றி தற்போது சக்தி திருமகன் என்று படத்திற்கு தலைப்பை மாற்றிவிட்டது. இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் ஆண்டனியிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசிய அவர் இங்கு படங்களுக்கான தலைப்பை பதிவு செய்ய 3 கம்பெனிகள் உள்ளது.
விஜய் ஆண்டனியின் எக்ஸ் தள பதிவு:
#MAARGAN Trailer out now 🩸https://t.co/jKYyALg4F9@leojohnpaultw @AJDhishan990 @mrsvijayantony @vijayantonyfilm pic.twitter.com/jmiLXC7iJz
— vijayantony (@vijayantony) May 26, 2025
நாங்கள் பதிவு செய்தது வேறு ஒரு இடத்தில் அவர்கள் பதிவு செய்தது ஒரு இடத்தில். இதற்கு காரணக் கம்யூனிகேஷன் கேப் என்று பதிலளித்த அவர், முன்னதாகவே அவர்கள் படத்தின் தலைப்பை அறிவித்து விட்டார்கள். ஏன் பிரச்னை பன்னனும். அவங்களும் காசுப்போட்டு தான படம் பன்றாங்க. ஒரு படத்தை தயாரிப்பதற்குள் எத்தனை சிக்கல்கள் இருக்குனு நமக்கும் தெரியும். அதனாலதான் நாங்க பெயரை மாற்றிவிட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்,