டொவினோவுடனான நட்பிற்கு எதிரான சதி இது – உன்னி முகுந்தன் விளக்கம்
Unni Mukundan: மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். இந்த நிலையில் உன்னி முகுந்தன் குறித்து அவரது மேனேஜர் நேற்று புகார் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் உன்னி முகுந்தன் தனக்கும் நடிகர் டொவினோவிற்கு இடையே உள்ள நட்பை கெடுக்க நடக்கும் சதி என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் உன்னி முகுந்தன் (Actor Unni Mukundan) தன்னை தாக்கியதாக அவரது மேனேஜர் விபின் நேற்று கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது நேற்று மலையாள சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின் கூறியதாவது, சமீபத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான நரிவேட்டா படத்தைப் பார்த்து பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியதற்காக உன்னி முகுந்தன் தாக்கியதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக விபின் அளித்த பேட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வந்த உன்னி முகுந்தன் தன்னை கார் பார்க்கிங்கு வரச் சொன்னதாகவும் அங்கு சென்று பார்க்கும் போது அவர் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் கடந்த சில நாட்களாகவே நடிகர் உன்னி முகுந்தன் தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்தார் அவரது மேனேஜர் விபின். மேலும் இதன் காரணமாக அவருடன் இருப்பவர்களிடம் கோவப்பட்டதாகவும் அதனால் தற்போது பலரும் அவருடன் நட்பில் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.




மேனேஜரின் புகாருக்கு விளக்கம் அளித்த உன்னி முகுந்தன்:
மனோராக செய்திக்கு நடிகர் உன்னி முகுந்தன் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, தனது மேனேஜர் விபினின் குடியிருப்பு பகுதிக்கு தனது சக நண்பருடன் சென்றதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் பேசிய பகுதி சிசிடிவி இல்லாத இடம் என்பதால் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக விளக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
தொடர்ந்து பேசிய உன்னி முகுந்தன் விபினை பார்க்க சென்றதற்கு காரணம் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக அவர் நடந்துகொள்வதை கேட்கவே அங்கு சென்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய உன்னி முகுந்தனின் சன் கிளாஸை கழட்டி உடைத்ததை ஒப்புக்கொண்ட அவர் விபினை தாக்கியதாக கூறுவதை மறுதார். உடல் ரீதியாக எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
டொவினோவிற்கு விளக்கம் கொடுத்த உன்னி முகுந்தன்:
அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் உன்னி முகுந்தன், நான் டோவினோ தாமஸை அழைத்து இந்த நிலைமை குறித்து விளக்கினேன். நாங்கள் இந்த சினிமா துறையில் நுழைந்ததிலிருந்து நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களுக்கு இடையே வலுவான பிணைப்பு உள்ளது. எந்தவித தவறான வதந்தியும் எங்கள் இருவருக்கும் இடையேயான நட்பை அழிக்க முடியாது என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.