‘மன்னிப்பு கேட்டாதான் தக் லைஃப் ரிலீசாகும்’.. கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுத்த கர்நாடகா அமைச்சர்!
Kamal Haasan controversy: தக் லைஃப் பட விழாவில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு கன்னட அமைப்பினர் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் தற்போது கர்நாடக அமைச்சர் கமல் ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டு கமல் ஹாசன் குறித்து புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து கமல் ஹாசன் பேசிய போது சிவராஜ் குமார் கர்நாடகாவில் இருக்கும் என் குடும்பம். அதன் காரணமாகவே அவர் இங்கு வந்தார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் கமல் ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததுதான் சிவராஜின் மொழி என்று தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல் ஹாசன் பேசினார்.
இந்த நிலையில் கமல் ஹாசன் பேசியது தற்போது கர்நாடகாவில் தீயார் பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்கு உள்ள கன்னட அமைப்புகள் மற்றும் அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக அமைச்சர் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தக் லைஃப் விழாவில் கமல் ஹாசன் பேசிய வீடியோ:
“When I met #KamalHaasan sir at my house with my father, i asked Kamal sir for a hug & i didn’t bath for 3 days, because i want his odour on me🫂. After my cancer surgery, KamalHaasan sir called me, I had tears after his call🥹♥️”
– #Shivarajkumar pic.twitter.com/lmcVqZ17Zc— AmuthaBharathi (@CinemaWithAB) May 25, 2025
கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியது:
நடிகர் கமல் ஹாசன் கன்னடர்கள் குறித்து தகாத முறையில் பேசி இருக்கிறார். மேலும் கன்னடர்கள் இந்த செய்லைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கமல் ஹாசன் நிச்சயமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கமல் ஹாசன் நிச்சயமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. அப்படி இல்லை என்றால் கமல் ஹாசனின் படங்கள் கர்நாடக மாநிலத்தில் வெளியாகாது என்று சிவராஜ் தங்கடகி கூறினார்.
அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் இந்த கருத்திற்கு பல கன்னட அமைப்புகளும் கன்னடர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் கன்னட அமைப்பினர் பலர் கர்நாடகாவில் உள்ள பெலகாவி, மைசூர், ஹுப்பள்ளி, பெங்களூரு போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கம்ல் ஹாசனுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.