AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Prasanna : குட் பேட் அக்லி படத்தில் கதையே புரியாம நடிச்சேன்… ஆதிக் ரவிச்சந்திரன் இப்படிப்பட்ட இயக்குநரா… மேடையில் புலம்பிய நடிகர் பிரசன்னா!

Good Bad Ugly Movie : கோலிவுட் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் குமாரின் முன்னணி நடிப்பில் இந்த படமானது வெளியாகியிருந்தது. எதிர்பாராத ஹிட் கொடுத்த இப்படத்தின் வெற்றி விழா மேடையில் நடிகர் பிரசன்னா கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prasanna : குட் பேட் அக்லி படத்தில் கதையே புரியாம நடிச்சேன்… ஆதிக் ரவிச்சந்திரன் இப்படிப்பட்ட இயக்குநரா… மேடையில் புலம்பிய நடிகர் பிரசன்னா!
நடிகர் பிரசன்னாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Apr 2025 16:43 PM IST

நடிகர் அஜித் குமாரின் (Ajith kumar) முன்னணி நடிப்பில் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த திரைப்படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran)  இயக்கியுள்ளார். இந்த படமானது அஜித்தின் ஹிட் படங்களில் உள்ள கதாபாத்திரங்களை இணைத்து ஒரு மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன்  (Trisha Krishnan) நடித்திருந்தார். மேலும் நடிகை திரிஷாவின் தம்பி கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா (Prasanna)  நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், 2025, ஏப்ரல் 16ம் தேதியில் சென்னையில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா கலந்துகொள்ளவில்லை. பொதுவாக நடிகர் அஜித் குமார் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசன்னாவின் பேச்சு ஒட்டுமொத்த இணையதளங்களிலும், வைரலாகி வருகிறது. அவர் நிகழ்ச்சி மேடையில் ” குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதையே புரியாமல் தான் நடித்தேன் என்று கூறியுள்ளார். தற்போது இவரின் பேச்சு இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரசன்னா சொன்ன விஷயம் :

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றி விழாவில், நடிகர் பிரசன்னா “குட் பேட் அக்லி படத்தில் கதையே புரியாமல்தான் நடித்தேன், என்ன டயலாக் இது என்று சுத்தமாக ஈடுபாடே இல்லாமல்தான் இந்த படத்தில் பேசினேன். கடைசி வரைக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எப்படி படம் இயக்குகிறார் என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, படம் ஓடுமா என்ற சந்தேகத்தில்தான் நானும் இருந்தேன். ஆதிக் ரவிச்சந்திரன் மற்ற இயக்குநர்களைப் போல இல்லை, சாதாரண இயக்குநர் என்றால் ஒரு காட்சியை இப்படிதான் எடுக்கவேண்டும் என்று ஒரு வரையறை இருக்கும்.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் அப்படி இல்லை, குட் பேட் அக்லி படத்தில் கப்பலில் நான் ஒரு பெண்ணை பிடித்து வைத்திருந்த காட்சியை எடுக்கும்போது எனக்கு எந்த சீனும் இல்லை என்று நான் உறங்கிவிட்டேன். அதைத் தொடர்ந்து மீண்டும் அசிஸ்டன் டைரக்டர் வந்து சார் உங்களுக்குத்தான் அடுத்த காட்சி என்று அவர் கூறினார். அந்த காட்சியில் “புன்னகை அரசிக்கு தெரியாமல் இருந்தால் போதும்” என்ற டயலாக்கை கொடுத்து அவர் அதிர்ச்சியை கொடுத்தார். அதற்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். மேலும் இந்த படத்தில் மட்டும்தான் கதையே புரியாமல் நடித்தேன் என்று அவர் வெளிப்படியாக் கூறியிருந்தார்.

Follow Us