இணையத்தில் கவனம் பெரும் நடிகர் மோகன்லாலின் தொடரும் படத்தின் தமிழ் ட்ரெய்லர்
Thodarum Movie Tamil Trailer: கே.ஆர். சுனிலுடன் இணைந்து திரைக்கதை எழுதிய தருண் மூர்த்தி இயக்கிய இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 2025-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிகை சோபனா நடித்துள்ளார்.

மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal) நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் தொடரும். இந்தப் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்தார் நடிகை சோபனா (Actress Shobana). இதனால் இந்தப் படம் இவர்கள் இருவருக்கும் சிறந்த காதல் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் முற்றிலும் மாறுபட்ட படமாக இருந்தது. படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தற்போது தமிழில் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு படத்தின் தமிழ் ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது முன்னதாக மலையாளத்தில் வெளியான ட்ரெய்லருக்கும் தமிழில் வெளியான ட்ரெய்லர் கட்டிற்கு நிறைய வித்யாசகங்கள் காணப்பட்டது. இந்த நிலையில் தமிழி வெளியான ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு வருகின்ற 9-ம் தேதி மே மாதம் 2025-ம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Thodarum Tamil Trailerhttps://t.co/yb9CszjZlF#ThodarumFromMay9@Rejaputhra_VM @talk2tharun #Shobana #MRenjith #KRSunil #ShajiKumar @JxBe #APInternational
— Mohanlal (@Mohanlal) May 5, 2025
இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் சோபனாவுடன் இணைந்து நடிகர்கள் ஃபர்ஹான் பாசில், பினு பப்பு மணியன்பிள்ளை ராஜு, ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒலிப்பதிவை ஜேக்ஸ் பிஜோய், எடிட்டிங்கை நிஷாத் யூசுப் மற்றும் ஷஃபீக் விபியும், ஒளிப்பதிவை ஷாஜி குமாரும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மோகன்லால் நடிப்பில் வெளியான படம் எம்புரான். இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருந்தார். 2019-ம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக எம்புரான் படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் பேராதவரைப் பெற்றது.
படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மலையால சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் மொத்த வசூல் சாதனையையும் முறியடித்து புதிய ஒரு பெஞ்ச் மார்க்கை செட் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து எம்புரான் மற்றும் துடரும் என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.