விஜய பிரபாகரனுக்கு கை கொடுக்குமா விருதுநகர் தொகுதி… கள நிலவரம் கூறுவதென்ன!
DMDK Vijaya Prabhakaran: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடக்கூடிய விருதுநகர் தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. தொகுதி கள நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் தொகுதி கை கொடுக்குமா
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளன. இதில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இந்த அளவு உள்ளது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.
“விரு” என தொடங்கு சென்டிமென்ட் தொகுதி
தேமுதிகவில் “விரு” என தொடங்கும் விருதுநகர் தொகுதியை சென்டிமென்டாக திமுக தலைமையிடம், தேமுதிக வலியுறுத்தி பெற்றதாக கூறப்படுகிறது. அதற்காக இந்த தொகுதியில் கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த சீனிவாசனுக்கு பதிலாக விஜய பிரபாகரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த தொகுதியில் விஜய பிரபாகரனுக்கு போட்டியிட விருப்பமில்லை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Velachery Constituency Election 2026: வேகமாக வளர்ந்து வரும் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?
அருப்புக்கோட்யை தொகுதிக்கு குறி வைத்த விஜயபிரபாகரன்
ஏனென்றால் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார். இதனால், இந்த தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வசம் சென்றது. இதனிடையே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 61,659 வாக்குகள் பெற்று 12,278 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.
தந்தை சென்டிமென்ட் காரணமாக…
இதனாலும், விஜயகாந்தின் சொந்த ஊரான ராமானுஜபுரம் அருப்புக்கோட்டை தொகுதியில் வருகிறது என்பதாலும், இந்த தொகுதியில் பெண்களின் ஆதரவு விஜய பிரபாகரனுக்கு இருந்தது. இதனால், தந்தை சென்டிமென்ட் ஆக அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடலாம் என்று விஜய பிரபாகரன் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சாத்தூர் ராமச்சந்திரன் தனது தொகுதியை தக்க வைத்துக்கொள்வதற்காக விருதுநகரை அவருக்கு ஒதுக்குவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.
அனுதாப வாக்குகள் மூலமாக விஜயபிரபாகரன் வெற்றி
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் புது முகமான கணேசனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால், விஜய பிரபாகரன் எளிதில் வென்று விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும், கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் தோல்வியடைந்த காரணத்தால், அனுதாப வாக்குகளின் அடிப்படையில் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுதி நிலவரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்..