6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. யார் யாருக்கு வழங்கப்படும்.. பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகள்!

Rajya Sabha MP Seats: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் யார் யாருக்கு வழங்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. யார் யாருக்கு வழங்கப்படும்.. பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகள்!

திமுக-அதிமுகவில் யாருக்கு எம்.பி. பதவி

Updated On: 

04 Mar 2026 11:03 AM

 IST

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதில், திமுகவைச் சேர்ந்த என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு மற்றும் அதிமுகவை சேர்ந்த மு. தம்பிதுரை, இந்த கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மார்ச் 5- ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வாக்குப்பதிவு தேவை எனில் மார்ச் 16- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக மற்றும் அதிமுகவில் இன்று புதன்கிழமை ( மார்ச் 4) மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் 2 எம்.பி. சீட் யாருக்கு வழங்கப்படும்

இதில், அதிமுக வசம் உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை ஒன்றை பாமக தலைவர் அன்புமணிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு சீட்டை அதிமுகவை சேர்ந்த தம்பிதுரைக்கு மீண்டும் வழங்க உள்ளதா அல்லது புது முகத்துக்கு வாய்ப்பளிக்க உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, அந்த சீட்டை பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்க வேண்டும் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்.. தீவிர கட்டுப்பாடுகள்!

அண்ணாமலைக்கு எம்.பி. சீட்

அதன்படி, அண்ணாமலைக்கு எம்பி பதவி வழங்கப்படும் பட்சத்தில், அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியல் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. இதே போல, திராவிட முன்னேற்றக் கழகம் வசம் உள்ள 4 ராஜ்ய சபா உறுப்பினர் இடங்களில் ஒன்று தேமுதிகவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுகவில் யாருக்கு எம்பி சீட் வழங்கப்படும்

மீதமுள்ள 3 இடங்களில் திருச்சி சிவா மற்றும் திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள ஒரு ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஒரு வேளை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறவில்லை எனில், அந்த சீட்டை எம். எம். அப்துல்லாவுக்கு வழங்கி அவரை மீண்டும் எம்பியாக திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: அதிமுகவில் ஒட்டுமொத்தமாக இணைந்த 18 கிளை செயலர்கள்… காலியான ஓபிஎஸ் கூடாரம்…!

Follow Us
Related Stories
மாணவர்களுக்கு இலவச கல்வி முதல் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி வரை… விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!
இந்த அணி.. அந்த அணி.. டெல்லி அணியை தவெக அடித்து நொறுக்கும்… தஞ்சாவூரில் விஜய் ஆவேசம்!
அதிமுகவில் ஒட்டுமொத்தமாக இணைந்த 18 கிளை செயலர்கள்… காலியான ஓபிஎஸ் கூடாரம்…!
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு… செம குஷியில் கட்சியினர்… எம்.பி. ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?
Udhayanidhi Stalin Tamil Nadu Election: முதல் தேர்தலில் அமோக வெற்றி… குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தல்… களமிறங்கும் மத்திய அமைச்சர்கள் குழு? பாஜக தலைமையின் பலே திட்டம்!
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ