AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் விஜய்யின் பரப்புரை திடீர் ரத்து – இதுதான் காரணமா?

Vijay Cancels Chennai Campaign : சென்னையில் வில்லிவாக்கம், தியாகராயநகர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில் திடீரென அவரது பிரச்சாரம் ரத்து செய்யபபட்டிருக்கிறது. இது அவரது கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் விஜய்யின் பரப்புரை திடீர் ரத்து – இதுதான் காரணமா?
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Apr 2026 07:14 AM IST

சென்னை, ஏப்ரல் 6 : சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏப்ரல் 6, 2026 இன்று வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய 4 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வில்லிவாக்கம், மற்றும் தி.நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜய் திடீரென தனது பரப்புரையை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வெகு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம்காணவிருக்கறது. இந்த தேர்தலில் மக்களிடையே எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் விஜய்யின் பரப்புரை திடீர் ரத்து

அந்த வகையில் தனித்து களம்காணும் தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் விஜய்யால் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து வீடியோ மூலம் 234 தொகுதி வேட்பாளர்களுக்காகவும் விஜய் வாக்கு சேகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது.. அதனால் எங்கள் வேட்பாளரின் பெயரை கூறினார் – குஷ்பு பதில்

இந்த நிலையில் தான் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஏப்ரல் 6, 2026 அன்று வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகாயநகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வில்லிவாக்கம் மற்றும் தியாகராயர் நகர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி வில்லிவாக்கம் தொகுதியில் மதியம் 12 மணி முதல் மணி வரையும் தியாகராயநகர் தொகுதியில் 2 முதல் 3 மணி வரையும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையும் படிக்க : சொத்து மதிப்பை குறைத்து காட்டிய விஜய்?.. வேட்பு மனுவில் மீண்டும் குளறுபடி?..

காரணம் என்ன?

இந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் 1 மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய போதுமானதாக இருக்காது என அக்கட்சி நிர்வாகிககள் தலைமையிடம் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்து விட்டு மற்றொரு இடத்திற்கு செல்ல காலதமாகிவிடும் என்பதால் இந்த முடிவெடுக்கப்ட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Follow Us