AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் நாளை பரப்புரை – காவல்துறை அனுமதி

Vijay Gets Permission: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் மட்டும் ஏப்ரல் 6, 2026 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த தொகுதியில் ஆதவ் அர்ஜூனாவிற்காக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் நாளை பரப்புரை – காவல்துறை அனுமதி
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Apr 2026 20:35 PM IST

சென்னை, ஏப்ரல் 5 : தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஏப்ரல் 6, 2026 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து திமுக கூட்டணி, அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த தேர்தலில் முதன்முறையாக களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனிதத்து போட்டியிட விருக்கிறது. இதற்காக 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார்.

இதையும் படிக்க : அரசியல்வாதியாக முதன்முறையாக பிரபல டிவிக்கு பேட்டியளிக்கும் விஜய் – எப்போ தெரியுமா?

வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் நாளை பரப்புரை

இந்த நிலையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், கடந்த ஏப்ரல் 2, 2026 அன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய்யின் வயது உள்ளிட்ட விவரங்கள் முரணாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சென்னையில் ஏப்ரல் 6, 2026 அன்று வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், மற்றும் தி.நகர் ஆகிய 4 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதிக கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணம் காட்டி மற்ற தொகுதிகளில் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தவெக பொதுச்செயலாளர் ராஜ்மோகனின் சொத்துமதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்

இதனையடுத்து தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் ஏப்ரல் 6, 2026 அன்று மதியம் 12 மணி அளவில் பரப்புரை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஒரு மணி நேரம் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவது குறி்ப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மார்ச் 30, 2026 அன்று பெரம்பூர், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெரம்பூர், கொளத்தூர் தொகுதியில் பேசிய அவர் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை ரத்து செய்தார். இது அக்கட்சி தொண்டர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.

Follow Us