ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை..
இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்யசாமியிடம் முன்னதாக ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது பணையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us