11 கி.மீ தூரம் சாலை வலம் சென்ற விஜய்.. உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நெல்லை, ஏப்ரல் 8, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்றைய தினம் நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் சாலை வழிப் பேரணியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவிப்பு.. சீட் தராததால் அதிருப்தி என தகவல்..
நெல்லையில் விஜய் ரோட் ஷோ:
நெல்லையில் இன்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, விஜய் சென்னையிலிருந்து காலை விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்தார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் பகுதியில் அமைந்துள்ள பிரச்சாரத் தளத்திற்கு சென்றார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், திமுக மற்றும் பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதனைத் தொடர்ந்து தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை வழியாக கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ மேற்கொண்டார்.
மேலும் படிக்க: தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..
அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, விவசாயிகள் நெல் மணிகளை வழங்கி ஆதரவு தெரிவித்தனர். மேலும், வழியெங்கும் விஜய்க்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.