AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..

பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் தேர்தல்கள் நடந்தபோது, அங்கு டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற பீகார் மாநிலத்திலும் அதே நிலை தான். அங்கு கூட டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மீது தேர்தல் ஆணையத்தின் கவனம் திரும்பி, பாஜக தூண்டுதலின் பேரில் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Apr 2026 18:46 PM IST

சென்னை, ஏப்ரல் 8, 2026: தமிழகத்தில் வரவிருக்கும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம், ஐஏஎஸ் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்:

அந்த பதிவில், ” பாஜகக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யாமல் இருந்தாலும், தேர்தல் களத்தில் முழுமையாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், தற்போது ஒருதலைப்பட்சமான மற்றும் அளவுக்கு மீறிய அரசியல் நடவடிக்கையாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் திரு. வி. இரையன்பு ஐஏஎஸ் அவர்களை மாற்றியிருப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தேர்தல் ஆணையம், ஆட்சியில் உள்ள பாஜகவின் உத்தரவுகளை நிறைவேற்றுவது வெட்கக்கேடான விஷயமாகும். தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு வழங்கிய பாதுகாப்பு, பாஜகக்காக தேர்தல் பணிகளை செய்ய அல்ல. நாட்டை அதிகாரவாத பாதையில் கொண்டு செல்ல முயலும் பாஜக ஆட்சியில், ஆதிக்க மனப்பான்மையுடன் செயல்படும் தேர்தல் ஆணையம், இதை உணரத் தவறி தனது கண்ணியத்தை தெருவில் இழுத்து வந்து நிறுத்தியுள்ளது.

பாஜக தூண்டுதலின் பேரில் செயல்படும் தேர்தல் ஆணையம்:

பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் தேர்தல்கள் நடந்தபோது, அங்கு டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற பீகார் மாநிலத்திலும் அதே நிலை தான். அங்கு கூட டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மீது தேர்தல் ஆணையத்தின் கவனம் திரும்பி, பாஜக தூண்டுதலின் பேரில் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இணைந்து திட்டமிட்டுள்ள தேர்தல் முறைகேடுகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுடன் தேர்தல் ஆணையம் செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இன்று அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் நாளை இருக்காமல் போகலாம். ஆனால், நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியலமைப்பு முன்னோர்கள் உருவாக்கிய தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையை தெருவில் இழுத்து வரும் இந்த நடவடிக்கை, நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மிகப் பெரிய ஆபத்தாகும்.

தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே ‘தலைமைச் செயலாளர்’ மற்றும் ‘டிஜிபி’ போன்றோரின் மாற்றத்தை தூண்டிவிடும் இந்த “காடாட்சி” நிலைமை, “நான் தான் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பேன்” என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்த பிரதமருக்கும், அவரின் தலைமையில் செயல்படும் மத்திய பாஜக அரசுக்கும் தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை ஒருபோதும் புரியாது என்பதைக் காட்டுகிறது.

தேர்தல் ஆணையமும் காவி நிறம் பூண்டுவிட்டது:

இந்த எல்லா நடவடிக்கைகளும், ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருந்த தேர்தல் ஆணையமும் காவி நிறம் பூண்டுவிட்டது என்பதையே வெளிப்படுத்துகின்றன.

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், தமிழ்நாட்டில் பாஜக கடுமையான தோல்வியைச் சந்திக்கும் என்பது உறுதி. திருமணத்தை தாலி மறைத்து நிறுத்துவது போல, அதிமுக–பாஜக இணைந்த “என்டிஏ” கூட்டணிக்காக தேர்தல் ஆணையம் காட்டும் அளவுக்கு மீறிய அகங்காரம் இதன் உச்சமாகும்.

Follow Us