கரூர் சம்பவம் முதல் விவாகரத்து வரை… திமுக – பாஜகவை விமர்சித்து கர்ஜித்த விஜய்!
Tvk Leader Vijay Speech Nellai: கரூர் சம்பவம் முதல் விவகாரத்து விவகாரம் வரை எனது அரசியல் பயணத்துக்கு பல்வேறு தடைகளை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் விதித்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.
நெல்லை மாவட்டம், கே.டி.சி. நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 8) பரப்புர மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் சுலபமாக திருநெல்வேலி பிரச்சாரத்துக்கு வருகை தர முடிந்தது. இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் சார் அதிகாரம் இல்லாமல் இருப்பதால் இந்த பரப்புரைக்கு சுலபமாக அனுமதி கிடைத்துள்ளது. இல்லையெனில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக கூட்டணிகள் ஒன்றாகவே உள்ளன. தமிழக மக்களுக்காக விஜய் வந்துவிடக் கூடாது என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. திமுக கூட்டணி போல பாஜக தலைமையிலான கூட்டணியும் கலகலத்து போய் உள்ளது. இந்த கூட்டணி கட்சிகளுக்கு நமது மீது அதிக கோபம் உள்ளது.
கரூர் சம்பவம் முதல் விவாகரத்து வழக்கு வரை
போலியான காங்கிரசை சில பல கோடிகள் கொடுத்து திமுக தன்னிடம் வைத்துள்ளது. ஆனால், உண்மையான காங்கிரஸ் நமது பக்கமே உள்ளது. கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழியே போட்டு பார்த்தார்கள் அதில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதை போல, ஜனநாயகன் படத்தை முடக்கி பார்த்தனர். அப்போது, விஜய் கண்டுக்கவில்லை. இதை தொடர்ந்து, விஜயின் பிரச்சாரத்துக்கு தனித்தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவை எல்லாம் எடுபடவில்லை என்பதால் தேர்தல் நேரத்தில் எனது குடும்பம் தொடர்பாக சில அவதூறுகளை பரப்பினர். அவ்வளவும் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனது.
மேலும் படிக்க: கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் பதில்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்!




எந்த முகத்தை வைத்துக் கொண்டு முதல்வர் வாக்கு கேட்கிறார்
தமிழகத்தில் சிறுமிகள் முதல் பெரியோர்கள் வரை பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது ஒரு புறம் இருக்க மணல் கடத்தல், மாபியா கும்பல் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 12- ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். திமுக நிர்வாகியால் 2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவர்கள் திரும்பி வருவார்களா. இவ்வளவு கொடுமைகளை வைத்துக்கொண்டு மக்களிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சார் வாக்கு கேட்கப் போகிறார்.
தவெக-திமுக இடையே தான் போட்டியே
தமிழகத்தில் 5 ஆண்டுகளாக காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் சார் என்ன செய்தார். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஊழல் ஊறிப் போய் இருக்கிறது. ஸ்டாலின் சார் உங்கள் பணத்தை வைத்து மக்கள் வாக்கை வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல். இந்த தேர்தல் முடிவுகளை திமுகவாலோ மற்ற கட்சிகளாகவோ மாற்ற முடியாது. ஒட்டுமொத்த மக்களும் மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்து விட்டனர். தமிழகத்தில் திமுக- தவெக இடையே தான் போட்டி நடைபெறுகிறது. இது ஒரு தலைமுறைக்கான தேர்தலாகும்.
மேலும் படிக்க: “ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!