AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குட்டீஸ்.. அடம்பிடிச்சு உங்கள் விஜய் மாமாவுக்காக ஓட்டு போட சொல்லுங்க – கியூட்டாக பேசிய விஜய்..

நீங்கள் எதுவும் செய்யவில்லை. அப்படியானால், ஏன் 20 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜியை கோவை வரை ஓட விட்டீர்கள்? மக்களே, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு நீதி கேட்க வந்த நான், இன்று உங்களிடமே ஒரு நீதியை கேட்கிறேன். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அனைவரும் வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டு தவறாமல் வாக்களிக்க வேண்டும். இது உங்களுக்கான தேர்தல்.

குட்டீஸ்.. அடம்பிடிச்சு உங்கள் விஜய் மாமாவுக்காக ஓட்டு போட சொல்லுங்க – கியூட்டாக பேசிய விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 21 Apr 2026 18:29 PM IST

சென்னை, ஏப்ரல் 21, 2026: சென்னை நந்தனத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது, கரூர் சம்பவம் குறித்து பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், “கரூரில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம் என கூறிவிட்டு, சட்டசபைக்குள் சென்று என் மீது பழி சுமத்தினர். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்திலேயே நான் அங்கு இருந்தேன். நாமக்கல்லில் இருந்து வரும் வழியில் இருந்த மக்களை அம்போ என விட்டுவிட்டு வர முடியுமா?

கரூரில் சம்பவம் – செந்தில் பாலாஜி ஏன் கோவையில் போட்டியிடுகிறார்?

நீங்கள் எதுவும் செய்யவில்லை. அப்படியானால், ஏன் 20 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜியை கோவை வரை ஓட விட்டீர்கள்? மக்களே, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு நீதி கேட்க வந்த நான், இன்று உங்களிடமே ஒரு நீதியை கேட்கிறேன். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அனைவரும் வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டு தவறாமல் வாக்களிக்க வேண்டும். இது உங்களுக்கான தேர்தல்.

போட்டி திமுக மற்றும் தவெக இடையே தான்:

நான் ஒருநாளும் உங்களை பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். இங்கு நான்கு முனைப் போட்டி, மூன்று முனைப் போட்டி என்று எதுவாகச் சொன்னாலும், உண்மையான போட்டி இரண்டு பேருக்குள் தான் — ஒன்று திமுக, மற்றொன்று தமிழக வெற்றிக்கழகம். ஸ்டாலின் வேண்டுமா? அல்லது மக்களை நேசிக்கும் உங்கள் விஜய் வேண்டுமா? வீட்டில் இருக்கும் குட்டீஸ் உங்கள் விஜய் மாமாவுக்காக, அப்பா அம்மா அன்னன் அக்கா பெரியம்மா பெரியப்பா கிட்ட சொல்லி விசில் சின்னத்தில் ஓட்டு போட சொல்லுங்க..

உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன் என நினைத்து, விசில் சின்னத்திற்கு வாக்களித்து ஒரே ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இது ஒரு ‘விசில் புரட்சி’ தேர்தலாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: ஒரு முறை உங்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுங்கள்.. கையெடுத்து கும்பிட்ட தவெக தலைவர்..

விஜய் அளித்த வாக்குறுதிகள்:

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்த உடனே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவியாக இருப்பதே எங்கள் நோக்கம். அதன் வெளிப்பாடாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

இரண்டாவது, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட பெண்கள் அனைவரும் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

மூன்றாவது, சட்டம் மற்றும் ஒழுங்கை மிகவும் கடுமையாக நிலைநாட்டுவோம். பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். மேலும், இளைஞர்களின் பாதுகாப்பிற்காக போதைப் பொருள் தடுப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, மக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாகப் பெறுவேன். இதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” எனக் குறிப்பிட்டார்.

Follow Us