Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TVK Vijay: முதல்முறையாக அரசியல் பிரச்சாரம்.. திருச்சியில் தொடங்கும் விஜய்!

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மாவட்ட வாரியாகத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். திருச்சியில் தொடங்கும் இப்பிரச்சாரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது.

TVK Vijay: முதல்முறையாக அரசியல் பிரச்சாரம்.. திருச்சியில் தொடங்கும் விஜய்!
விஜய்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 13 Sep 2025 07:00 AM IST

திருச்சி, செப்டம்பர் 12: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் முதல்முறையாக அரசியல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அவர் திருச்சி மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மக்களை கவர்ந்து வாக்குகளை பெறும் வகையில் பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றன. அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகமும் மக்களை சந்திக்கும் பயணத்தை இன்று முதல் தொடங்குகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 13) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக வார இறுதி நாட்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

திருச்சியில் தொடங்கும் விஜய்

இன்று காலை 10.30 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மரக்கடை என்ற இடத்தில் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 23 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியிருக்கின்றனர். 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே பேச விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாவட்ட வாரியாக மக்களை சந்திக்கும் விஜய், அந்தந்த பகுதிகளின் பிரச்னைகளையும், தான் ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பேன் என்பது தொடர்பாகவும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: எனக்கே திருச்சியில் அனுமதி கொடுக்கல.. தவெகவுக்கு பதிலடி கொடுத்த KN நேரு

தேர்தல் பரப்புரைக்கான முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்படியான நிலையில் திருச்சியைத் தொடர்ந்து அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அவர் மதியம் 11.30 மணியளவில் பரப்புரை செய்யவுள்ளார். அங்கு 25 நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கு வானொலி திடல் பகுதியில் மதியம் 3  மணியளவில் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரச்சாரம் மேற்கொள்ள அந்தந்த மாவட்டங்களில் கேட்ட இடம் ஒன்று, போலீசார் அனுமதி கொடுத்த இடம் ஒன்று என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

திருச்சி உற்சாக வரவேற்பு 

இதனிடையே விஜய் பரப்புரை மேற்கொள்ள பயன்படுத்தும் பேருந்து நேற்று பனையூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். விமானத்தில் திருச்சி வரும் விஜய்க்கு அம்மாவட்டமே அதிரும் வகையில் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொண்டர்களுக்கு பல அறிவுரைகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

Also Read: விஜயகாந்த் போல விஜய் – டிடிவி தினகரன் சொன்ன விஷயம்

பிரச்சாரத்தில் மக்களுக்கு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் நிறுத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விஜய் பயணம் செல்லும் பேருந்தை பின் தொடரக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.