TVK Vijay: நான் களத்துக்கு வாரேன்.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். திருச்சியில் தொடங்கும் இப்பயணம், பாதுகாப்பு காரணங்களால் சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. தொண்டர்கள் காவல்துறையின் வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு, செப்டம்பர் 12: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்டந்தோறும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தொண்டர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான களப்பணியை ஆற்றி வருகின்றன. இந்த முறை புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்சி அரசியல் ரீதியாக திமுகவையும், கொள்கை ரீதியாக பாஜகவையும் எதிரியாக கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கி ஒன்றை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் விக்கிரவாண்டி மற்றும் மதுரை என இரண்டு இடங்களில் தவெக மாநாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அக்கட்சி அடுத்தக்கட்ட அடியை எடுத்து வைத்துள்ளது.
விஜய் சுற்றுப்பயணம்
அதாவது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்ட வாரிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2025, செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கும் அவர் முதல் நாளில் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் செல்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விஜய் பிரச்சாரம் செய்ய சில குறிப்பிட்ட இடங்களை அனுமதி கேட்ட நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து மாற்று இடம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கவுள்ளார். இப்படியான நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’எனக்கே அனுமதி இல்லை’ – விஜய் பிரசாரம் குறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு
அரசியல் வரலாற்றில் இல்லாத நிபந்தனைகள்
— TVK Vijay (@TVKVijayHQ) September 12, 2025
அதில் அதில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் நம்பிக்கையை மக்கள் முற்றிலுமாக இழந்துவிட்டனர். தங்களுக்கென்ற தோழமை மற்றும் பாரப்பட்சமற்ற தன்மையுடன் கூடிய அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களின் மனம் அறிந்து அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் மனசாட்சி உள்ள மக்களாட்சியை மக்களுக்காக அமைக்கும் பொருட்டு களமாடி வருகிறது.
மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது உங்க விஜய் நான் வாரேன் என்கிற நமது பயணம் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்பு பயணமாக அமையப்போகிறது. நாளை (செப்டம்பர் 13) காலை 10:35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரக்கத்திற்குட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து மதுரை மாநாட்டில் தெரிவித்தது போலவே என் குடும்ப உறவுகளாகிய உங்களை சந்திக்க, உங்களுக்காக குரல் கொடுக்க, உங்கள் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஜனநாயக முறையில் மக்களை சந்திக்க முயற்சிக்கிறோம். இந்நிலையில் தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில் நம் கழகத்தின் மீது மட்டும் மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் எங்கே பேசுகிறார்? அனுமதி வழங்கிய காவல் துறை..
இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் தார்மீக கடமையோடு அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கழகத் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல் துறையும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக கழகத் தோழர்களாகிய நீங்களும் அந்தந்த மாவட்டங்களில் பங்குபெறும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் காண வேண்டும். ஏற்கனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்பை நாம் நடத்த தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களை சந்திக்க ஏதுவாக காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளை ராணுவ கட்டுப்பாட்டுடன் பின்பற்றி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.