TVK Vijay: திருச்சியில் விஜய் பிரசாரம் செய்ய 23 நிபந்தனைகள் விதிப்பு!
Tamilaga Vettri Kazhagam: செப்டம்பர் 13ல் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரைக்காக திருச்சியில் 23 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். வாகனப் பயணம், கூட்டம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி, செப்டம்பர் 10: திருச்சியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நிலையில் காவல்துறையினர் 23 நிபந்தனைகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “விஜய் பயணிக்கும் வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் எந்த ஒரு வாகனமும் அனுமதி கிடையாது. விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்லக்கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்தல் பரப்புரையை காண வருவதை தவிர்த்திட வேண்டும். தேர்தல் பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகளை தமிழக வெற்றிக் கழகத்தினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
திருச்சி மரக்கடையில் பிரச்சாரம் முடிந்ததும் பால் பண்ணை வழியாக சென்னை பைபாஸில் பயணித்து லால்குடி, வாளாடி கிராமத்திற்குள் செல்லாமல் அரியலூர் மாவட்டத்திற்கு செல்ல வேண்டும். மேலும் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. வாகனத்தில் அமர்ந்து தான் விஜய் செல்ல வேண்டும். பிரச்சாரம் நிறைவு பெறும் மரக்கடை பகுதியில் 20 முதல் 30 நிமிடம் வரை விஜய் பேசலாம். பிரச்சார நடைபெறும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவ உதவுகளைப் பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்” என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை – சி.டி.நிர்மல் குமார்




இதனைத் தொடர்ந்து இந்த 23 வகையான நிபந்தன்களையும் ஏற்றுக் கொள்வதாக தமிழக வெற்றி கழகத்தினர் திருச்சி வடக்கு மாநகர துணை ஆணையர் சிபினிடம் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சாரம்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தீவிரமாக களப்பணி ஆட்சி வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் திருச்சியில் செப்டம்பர் 13ஆம் தேதி தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக சத்திரம் பேருந்து நிலையம் அருகே அவர் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி மறுத்தனர்.
அதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரை மேற்கொள்ளும் விஜய் என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்ட வாரியாக இருக்கும் பிரச்சனைகளை பற்றி அவர் தனது உரையில் விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக கூட்டணிக்கு நோவா? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்.. விஜய்க்கு அட்வைஸ்
இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாநாடு, பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டால் நீண்ட இழுபறிக்குப் பின் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்படுவதாக தவெக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.