Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026-ல் பெண் சிங்கமாக பிரேமலதா விஜயகாந்த் சட்டசபைக்குள் நுழைவார் – விஜய பிரபாகரன்..

DMDK Vijaya Prabakaran: தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ 2006-ல் கேப்டன் விஜயகாந்த் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் சென்றார்; 2026-ல் என் அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்” என தெரிவித்துள்ளார்.

2026-ல் பெண் சிங்கமாக பிரேமலதா விஜயகாந்த் சட்டசபைக்குள் நுழைவார் – விஜய பிரபாகரன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Sep 2025 22:51 PM IST

தேமுதிக, செப்டம்பர் 7, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தரப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் உதவிகளையும் தொடங்கி வைத்து வருகிறார். மேலும், “தமிழ்நாடு உங்களுடன்”, “ஸ்டாலின் பாங்க்” போன்ற திட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து நிலவரத்தை ஆராய்ந்து வருகின்றார். அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாஜக தரப்பிலும் தேர்தல் பணிகள் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரையில், அதன் தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13, 2025 முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.

பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம்:

தேமுதிகவைப் பொருத்தவரையில், அதன் தலைவர் விஜயகாந்த் மறைந்த பிறகு சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவே ஆகும். யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, 2026 ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், “உள்ளம் தேடி – இல்லம் நாடி” என்ற திட்டத்தின் மூலம் பிரேமலதா விஜயகாந்த் தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறார். மேலும், தேமுதிக வலுவாக உள்ளது, மீண்டும் கம்பேக் கொடுக்கும் எனவும் கூறி வருகிறார்.

மேலும் படிக்க: ’செங்கோட்டையனுக்கு தான் சப்போர்ட்.. விரைவில் சந்திப்பேன்’ உறுதியாக சொன்ன ஓபிஎஸ்!

பெண் சிங்கமாக சட்டசபைக்குள் நுழைவார்:

இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “2006-ல் கேப்டன் விஜயகாந்த் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் சென்றார்; 2026-ல் என் அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார். யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம், பேசலாம். ஆனால் மக்கள் மனநிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்த ஒரு குடும்பம் என்றால் அது கேப்டன் விஜயகாந்தின் குடும்பம் தான்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேனந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு..

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கும், கேப்டன் விஜயகாந்துக்கும் நல்ல நட்புறவு உள்ளது. இது சினிமா உலகத்திலிருந்தே இருந்து வருகின்றது. அதனை முன்னிட்டு தான் தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் கேப்டன் விஜயகாந்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இதில் எதுவும் தவறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் சீமானைப் பற்றி பேசிய அவர், ” சீமான் எப்போதுமே எது டிரெண்டாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்தி பேசுவார். அதன்மூலம் தனது கட்சியை வளர்த்துக் கொண்டு வருகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.