சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ

Tamil Nadu Assembly Election : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரள்நிதி மூலம் உங்களால் இயன்ற உதவிகளை செய்து களத்தில் நிற்கும் எங்களுக்கு உறுதியை தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் -  சீமான் வெளியிட்ட வீடியோ

சீமான்

Published: 

18 Mar 2026 21:09 PM

 IST

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு போன்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், மார்ச் 19, 2026 அன்று கட்சியின் தேர்கல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் பங்கேற்க மக்களிடம் திரள் நிதி கேட்டு காணொளி வெளியிட்டுள்ளார். அவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பேசிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

திரள் நிதி கேட்டு வீடியோ வெளியிட்ட சீமான்

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் வேலைகளில் தீவிரமாக இயக்கி வருகின்றன. திமுக சார்பில் வேட்புமனு அளித்தவர்களிடம் நேர்காணல்கள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தேர்தல் பிரச்சாரம், திமுக அரசுக்கு எதிரான ஆர்பாட்டம், தொகுதி பங்கீடு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 8 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றது.

சீமான் எக்ஸ் பதிவு

 

இதற்கிடையில் தேர்தலை சந்திப்பதற்காக மக்களிடம் திரள் நிதி கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டள்ளார். அதில், ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எப்போதும் போல நாதக தனித்து போட்டியிடவிருக்கஇறது. பல ஆண்டுகளாக இங்கு இருக்கக்கூடிய கட்சிகள் பணத்தை பதுக்கி, தேர்தலுக்காக பயன்படுத்தி வருகின்றன. தேர்தல் நேரங்களை பணத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கபைற்றி வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 30 முதல் 40 கோடி முதலீடு செய்கின்றன என்று பேசினார்.

இதையும் படிக்க : வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..

மேலும் பேசிய அவர், இந்த கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை மலர செய்ய வேண்டும் என்ற கனவோடு நாம் தமிழர் கட்சி களத்தில் இருக்கிறது. ஒரு தொகுதிக்கு 30 கோடிகள் வரை முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகின்ற நாங்கள் அந்த வட்டி காசை கூட செலவிட முடியாத நிலையில் இருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை. தன்னலம் மற்றும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கவே தொடர்ந்து இந்த களத்தில் நாம் தமிழர் நின்று வருகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், எப்போதும் போல எனது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து எஹ்களை வலிமைபடுத்தி வருகிறீர்கள். இம்முறையும் மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்த எங்களுக்கு நீங்களே பணமாகவும், வலிமையாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். திரள்நிதி மூலம் உங்களால் இயன்ற உதவிகளை செய்து களத்தில் நிற்கும் எங்களுக்கு உறுதியை தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்