தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. உறுப்பினர் சேர்க்கைகாக புதிய செயலி அறிமுகம்..
TVK District Secretaries Meeting: சென்னை பனையூரில் இருக்கக்கூடிய கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமாக மதுரையில் நடக்கக்கூடிய கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 20, 2025: தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அதாவது ஜூலை 20, 2025 தேதியான இன்று நடைபெறுகிறது. சென்னை பனையூரில் இருக்கக்கூடிய தமிழக வெற்றுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கியமாக தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாவது மாநாடு குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியின் செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் என தொடர்ந்து தேர்தலை சந்திப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரையில் நடக்கும் கட்சியின் 2வது மாநில மாநாடு:
தமிழக அரசியலில் தற்போது நான்குமுனை போட்டி நிலவை வருகிறது. முக்கியமாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் களமிறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்நிலையில் சென்னை பனையூரில் இருக்கக்கூடிய கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமாக மதுரையில் நடக்கக்கூடிய கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பேசப்படுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு இருக்கிறது, மாநாட்டிற்கு எத்தனை பேரை அழைக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகள் என்ன, குழுக்கள் அமைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுடன் தலைவர் விஜய் கலந்து ஆலோசிக்க உள்ளார்.
Also Read: ’திமுக பணத்தில் டீ கூட குடிச்சது இல்ல’ இபிஎஸ் குற்றச்சாட்டு கம்யூனிஸ்ட் பதில்!
உறுப்பினர் சேர்க்கைகாக புதிய செயலி அறிமுகம்:
அதேபோல் தமிழக வெற்றி கழகம் தரப்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி தலைவர் விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலியில் தொழில் நுட்ப கோளாறு அதாவது இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்பொழுது சில சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை சரி செய்து 2025 ஜூலை 20 தேதியான இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புது செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்தப்பட உள்ளது. இந்த செயலியை எவ்வாறு கையாள்வது போன்ற பயிற்சியை மாவட்ட செயலாளர்களுக்கு எடுத்துரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.