“காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி”.. திமுக மீண்டும் தொடர வேண்டுமா? இபிஎஸ் சரமாரி தாக்கு!!
Tamilnadu Assembly Election: திமுக என்பது ஒரு குடும்பத்துக்கான கட்சி. 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டுமா? அதற்கு இந்த தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக இனி அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டால், எங்கள் தொண்டர்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
Tamilnadu Polls 2026: இந்த தேர்தலில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். பெரம்பலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அடிமை, அதிமுக கட்சி அலுவலகம் டெல்லியில் இருக்கிறது என்றுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அவர் பேசுவதற்கு வேறொன்றும் சரக்கு இல்லை. ஸ்டாலின் உங்களுக்கு தில்லு, திராணி, தெம்பு இருந்தால் அதிமுகவை பற்றி பேசுங்கள். அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயார். அதை விட்டுவிட்டு எதையோ பேசி, மக்களை குழப்பி, அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறீர்களா? உங்களுக்கு 100 சதவீதம் தோல்வி நிச்சயம்.
இதையும் படிக்க: சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!
திமுகவுக்கு முற்றுப்புள்ளி:
மோடியை பற்றி ஸ்டாலின் என்னென்னவோ பேசுகிறார். ஆனால் அவரது தந்தை கருணாநிதி, மோடி நல்லவர் என்று பேசியிருக்கிறார். நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். கருணாநிதி காங்கிரசோடு கூட்டணியில் இருந்த போது என்ன சொன்னார் தெரியுமா? “கூடா நட்பு கேடாய் முடியும்” என்றார். அதே காங்கிரசோடு தான் இன்று திமுக கூட்டணி வைத்திருக்கிறது.
திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:
திமுக என்பது ஒரு குடும்பத்துக்கான கட்சி. 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டுமா? அதற்கு இந்த தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக இனி அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டால், எங்கள் தொண்டர்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அநாகரிகமாக பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். வடிவேலு நடித்த 22-ம் புலிகேசி திரைப்படத்தை போல் ஸ்டாலினும், உதயநிதியும் 5 வருடம் இந்த ஆட்சியில் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக ஆக்கிவிட்டனர்.
காற்றில் கூட ஊழல்:
இந்த ஊழல்வாதி ஆ.ராசா பேசியதாக அண்மையில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் அவர், கருணாநிதி குடும்பத்தை பற்றி பேசியிருக்கிறார். ஸ்டாலின், உங்களுக்கு தில்லு, திராணி, தெம்பு இருந்தால் ராசாவை கண்டியுங்கள். எங்க மேல கோபப்பட்டு என்ன பிரயோஜனம். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக இப்படி நாட்டை சுரண்டுகின்ற கட்சி வேண்டுமா? மீண்டும் தொடர வேண்டுமா? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை. இப்படியப்பட்ட ஒரு மோசமான ஆட்சி தேவையா? அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதத்தில் கஞ்சா விற்பனை தமிழ்நாட்டில்
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதத்தில் கஞ்சா விற்பனை தமிழ்நாட்டில் அறவே ஒழிக்கப்படும்.
இதையும் படிக்க: புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 – ராகுல் காந்தி அறிவிப்பு
கூப்பனில் தான் கொள்ளை அடிக்க முடியும்:
ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் கொடுக்கிறாராம். அதில் தானே கொள்ளை அடிக்க முடியும், ஊழல் பண்ண முடியும், அதுல குடும்பத்துக்கு வருமானம் வரும். நாம் அப்படி அல்ல. மக்களுக்கு நேரடியாக அரசு அறிவிக்கின்ற திட்டம் போய் சேர வேண்டும். அதிமுக ஆட்சி உங்களால் அமைந்த உடனே முதல் கட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் ரூ.10,000 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.