AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!

Sathankulam Lockup Death Case : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் லாக் அப் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் மரண வழக்கில் 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 06 Apr 2026 18:35 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இரவில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி அந்த கடையின் உரிமையாளரான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது. இதில், சிபிஐ சிறப்பான முறையில் விசாரணை மேற்கொண்டு 2,427 பக்க குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில், தந்தை மகன் லாக்கப் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று திங்கள்கிழமை ( ஏப்ரல் 6) வெளியிடப்பட்டது.

இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை

தண்டனை விவரம்: அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இதில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. முதலாவது குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.84.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2- ஆம் குற்றவாளி உதவியாளர் பாலகிருஷ்ணனுக்கு இரட்டை மரண தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.84.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3-ஆம் குற்றவாளி உதவியாளர் ரகு கணேசுக்கு இரட்டை மரண தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனை இரண்டும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஒன்றும், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.52 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய மேம்பாலம்.. நள்ளிரவில் பொது மக்கள் பதறியடித்து ஓட்டம்!

இரட்டை மரண தண்டனை- அபராதம் விதிப்பு

4- ஆம் குற்றவாளி தலைமை காவலர் முருகனுக்கு இரட்டை மரண தண்டனையும்,7 ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு பிரிவிலும், ஓராண்டு சிறை தண்டனை ஒரு பிரிவிலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு பிரிவிலும், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5- ஆவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒரு பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு பிரிவின்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ2.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 6- ஆம் குற்றவாளி தலைமை காவலர் முத்துராஜுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 2 பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரிவில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.32 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 7- ஆம் குற்றவாளி காவலர் செல்லதுரைக்கு இரட்டை தூக்கு தண்டனையும்,7 ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு பிரிவிலும், ஓராண்டு சிறை தண்டனை ஒரு பிரிவிலும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு குற்றவாளிக்கு தண்டனையில்லை

8- ஆம் குற்றவாளி காவலர் தாமஸ் பிரான்ஸ்க்கு இரட்டை மரண தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40.46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9- ஆம் குற்றவாளி காவலர் வெயிலுமுத்து என்பவருக்கு இரட்டை மரண தண்டனையும், ஒரு சட்ட பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு குற்றவாளியான பால் துறை இறந்துவிட்ட காரணத்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க: குதியில் மீண்டும் எம்எல்ஏ-வாக வலம் வருவாரா அருண்மொழிதேவன்!

Follow Us