ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை தீவிர சோதனை
Income Tax Raid : போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்ரல் 6 : சென்னையில், ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் ஏப்ரல் , 2026 அன்று காலை முதல் வருமான வரித்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024 ஆம் ஆண்டு கைது செய்தது.
ஜாபர் சாதிக்கிற்கு வீடுகளில் வருமான வரித்துறை தீவிர சோதனை
அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மணிஷ் சிஷோடியா தீர்ப்பை உதாரணமாக கொண்டு ஜாபர் சாதிக்கிற்கும் அவரது சகோதரருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையும் படிக்க : கணவன் – மனைவி தகராறு.. குறுக்கே வந்த மாமனார்.. திடீர் துப்பாக்கி சத்தம்.. அடுத்த நடந்த சம்பவம்!
இந்த நிலையில் தான் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான விடுதிகள், இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக அவரது இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் படி இந்த சோதனை நடைபெறுதவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டமன்றதேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் காட்டினால் பணம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : சென்னை: தேர் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு..!
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பணம் எடுத்து செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை வாட்ஸ்அப்பில் காட்டினாலே அவர்கள் பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதற்காக ஜாபர் சாதிக்கின் இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்கு பிறகே அது குறித்த உண்மை என்ன என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.


