தமிழக வெற்றிக் கழகத்தில் 23 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு… திமுகவைவிட அதிகம்!

Tamilaga Vettri Kazhagam: தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 வேட்பாளர்களில் 23 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் வேட்பாளர்களை விட அதிகம் ஆகும். அந்த வேட்பாளர்கள் யார் எந்த தொகுதி என்பதை பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தில் 23 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு... திமுகவைவிட அதிகம்!

தமிழக வெற்றிக் கழகத்தில் 23 பெண் வேட்பாளர்கள்

Published: 

29 Mar 2026 16:07 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 29 அறிவித்தார். இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட உள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களில் 23 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது, தமிழக வெற்றி கழகத்தில் 23 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், திமுகவின் 164 வேட்பாளர்களில் 18 பெண்களே தேர்தலில் போட்டியிட உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் (50 சதவீதம்) 117 பெண்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் 8 பெண்கள் தனி தொகுதியிலும், ஜே. லட்சுமி என்பவர் ஏற்காடு ( பழங்குடி) தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

மேலும் படிக்க: Salem North Constituency Election 2026: அரசியல் ரீதியாக மாறுபடும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி.. வேட்பாளர்களின் விவரம் இதோ..

தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட 23 பெண்கள் குறித்த விவரம்:

  1. திரு.வி.க. நகர் தனி தொகுதி – பல்லவி.
  2. குமாரபாளையம் தொகுதி – விஜயலட்சுமி.
  3. மதுராந்தகம் தனி தொகுதி- எழில் கேத்தரின்.
  4. திருப்பூர் வடக்கு தொகுதி- சத்யபாமா.
  5. குடியாத்தம் தனி தொகுதி- சிந்து.
  6. ராணிப்பேட்டை தொகுதி தாஹிரா.
  7. கெங்கவல்லி தனி தொகுதி- சுஜாதா.
  8. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி- திலகவதி.
  9. ஏற்காடு ( பழங்குடி) தொகுதி- ஜே. லட்சுமி.
  10. பவானிசாகர் தனி தொகுதி- கலைச்செல்வி.
  11. தாராபுரம் தனி தொகுதி- கௌரி சித்ரா.
  12. அவிநாசி தனித் தொகுதி- கமலி.
  13. வாசுதேவநல்லூர் தனி தொகுதி- அமுதா ராணி.
  14. சிவகங்கை தொகுதி- குழந்தை ராணி நாச்சியார்.
  15. ஆத்தூர் தொகுதி- கலைச்செல்வி.
  16. கவுண்டம்பாளையம் தொகுதி- கனிமொழி.
  17. ஜெயங்கொண்டம் தொகுதி- கவிதா.
  18. வேடசந்தூர் தொகுதி- நாகஜோதி
  19. சிவகாசி தொகுதி- கீர்த்தனா.
  20. முதுகுளத்தூர் தொகுதி- மலர்விழி.
  21. ராஜபாளையம் தொகுதி- ஜெகதீஸ்வரி.
  22. குன்னம் தொகுதி- ரேவதி.
  23. பல்லாவரம் தொகுதி – காமாட்சி.

நாளை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் தவெகவினர்

ஆகிய 23 சட்டமன்ற தொகுதிகளில் 23 பெண்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களை விட அதிகம் ஆகும். தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும், மதிப்பு அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த வேட்பாளர்கள் அனைவரும் நாளை திங்கள்கிழமை ( மார்ச் 30) முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க: திமுகவில் 60 புது முகங்களுக்கு வாய்ப்பு.. 3 அமைச்சர்களுக்கு ‘சீட்’ இல்லை.. முழு விவரம்!!

Follow Us
Related Stories
வாஷிங் மெஷின்-டிவி-ப்ரிட்ஜ் வாங்க ரூ.8000 கூப்பன்.. திமுக வாக்குறுதியில் அசத்தல் அறிவிப்பு!
திமுகவின் அரச பரம்பரைக்கு சட்டமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி… சபதம் ஏற்ற எடப்பாடி பழனிசாமி!
Edappadi Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் எடப்பாடி சட்டமன்ற தொகுதி.. இந்தமுறையும் வெற்றியை கைப்பற்றுவாரா எடப்பாடி பழனிசாமி?
S.Regupathy Tamil Nadu Elections 2026: தேசிய அரசியல் டூ மாநில அரசியல்.. மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா எஸ்.ரகுபதி!
Salem North Constituency Election 2026: அரசியல் ரீதியாக மாறுபடும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி.. வேட்பாளர்களின் விவரம் இதோ..
ஜெயலலிதாவுக்கு பிறகு… இரு தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் தலைவர் விஜய்… தேர்தல் வியூகம் தான் என்ன!
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு