AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: முதலில் பந்துவீசும் மும்பை.. பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்களா கொல்கத்தா?

MI vs KKR Toss Update: ஐபிஎல் 2026 சீசனின் 2வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 29ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

IPL 2026: முதலில் பந்துவீசும் மும்பை.. பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்களா கொல்கத்தா?
ஹர்திக் பாண்ட்யா - அஜிங்க்யா ரஹானே
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 29 Mar 2026 19:24 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 2வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 29ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியால் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. மும்பை அணி கடைசியாக 2012-ல் தனது தொடக்கப் போட்டியில் வெற்றி பெற்றனர், அதன் பிறகு ஒவ்வொரு சீசனின் முதல் போட்டியிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகின்றனர். இந்த 2026ம் ஆண்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற கடுமையாக முயற்சிக்கும்.

ALSO READ: 3 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் இணைய விரும்பிய சாம்சன்.. ருதுராஜ் கெய்க்வாட் சுவாரஸ்ய தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனில் மிகவும் வலுவான அணியாக தெரிகிறது. மும்பை அணியில் ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் மற்றும் ரியான் ரிகல்டன் போன்ற அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். மும்பை அணி மிடில் ஆர்டரிலும் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் நமன் தீர் போன்ற ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளதால் அபார பலமாக தெரிகிறது. மேலும், ஒரு போட்டியைத் தனி ஒருவராக மாற்றும் திறன் கொண்ட ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

மறுபுறம், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒரு புதிய வியூகத்துடன் களமிறங்கும். ஃபின் ஆலன் (விக்கெட் கீப்பர்) மற்றும் ரஹானே ஆகியோர் அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அங்ககிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரிங்கு சிங் மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோர் பேட்டிங்கை வலுப்படுத்துவார்கள். சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சு மாயாஜாலத்தைக் காட்ட அணியில் இருப்பார்கள். வேகப்பந்து வீச்சு வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி மற்றும் பிளெஸ்ஸிங் முசர்பானி ஆகியோரைச் சார்ந்திருக்கும். பந்துவீச்சிற்கு மேலும் வலு சேர்க்க, கேகேஆர் அணி உம்ரான் மாலிக்கை ஒரு திறமையான வீரராக அணியில் சேர்க்கலாம்.

ALSO READ: மீட்டிங் தவிர்ப்பு.. அணியுடன் பயணம் இல்லை.. ஐபிஎல் 2026ல் இருந்து விலகுகிறாரா தோனி?

விளையாடும் பிளேயிங் லெவன் விவரம்:

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் தீர், ஷர்துல் தாக்கூர், மயங்க் மார்கண்டே, கசன்ஃபர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, பிளெஸ்ஸிங் முசரபானி.

Follow Us