அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர், தற்போது 26வது நாளை எட்டியுள்ளது. போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றாலும், தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் முழுவதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர் பாதையில் தடங்கல்கள், உலகளாவிய எரிசக்தி சந்தையையே பாதித்துள்ளன.