அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில், சமூக ஊடக அடிமைத்தன்மை தொடர்பான வழக்கில் இளம் பெண் ஒருவர் முக்கிய வெற்றியை பெற்றுள்ளார். “கேலி” என அழைக்கப்படும் 20 வயது இளம்பெண் தாக்கல் செய்த வழக்கில், Meta மற்றும் Google நிறுவனங்கள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் தங்கள் தளங்களை உருவாக்கி, அவரது மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.